உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் -8 8

ஆகையால் வாயுமண்டலத்தொகுப்பின் அம்சங்களாகிய ஆ உயிர்வாயு, உப்புவாயு, கரிவாயு, நீர்வாயு என்பவைகளின் தன்மை இன்னவென ஒருவாறு ஆராய்ந்தோம். ஈண்டுமேலும் விரித்துரைப்பிற் பெருகுமெனவிடுத்தாம். இதுநிற்க.

இனி, வாயு, நிறை, அளவு, விரிதல் முதலிய குணங்கள் உடைத்தென்றுமுன்னரே கூறியுள்ளோம். மூன்றாவது குணமாகிய விரிதல் ஒன்றையே ஈண்டு ஆராய்வது அவசிய மெனக்கண்டு ஏனைய இரண்டினையும் விரியாது விடுத்தாம். வெப்பத்தால்பொருள்கள் விரிவடைகின்றன; குளிர்ச்சியால் சுருங்குத லுறுகின்றன என்பது அறிவோமன்றோ? அஃது அவ்வாறாதல் ஓர் உதாரணத்தால் விளக்கிக் காட்டுதும், கொல்லன் சக்கரத்தினின்று சுழன்ற ஓர் இருப்புப்பட்டையை அதனுடன் பொருத்தவிரும்பின் முன்னர் அப்பட்டையை யனலிற்காய்ச்சிப்பின்னர் அதனுட்சக்கிரத்தைப் புகுத்திச்

சு சுற்றிலும் தண்ணீர்வார்க்கின்றான். இதையுற்றுநோக்குங்கால் நம்மாராய்ச்சியிற் றோன்றுவதியாதெனின், வெப்பத்தினால் விரிதலைப்பெற்றுச் சக்கிரம் தன்னுள்ளடங்கவிடங் கொடுத்துப் பின்னர்க்குளிர்ச்சியினாற் சுருங்கி அதையிறுகப் பற்றிக் கொள்ளும் நுட்பத்தையறிவதொன்றாம். அவ்வாறே பூமியின் ஒருபாகத்தின்வாயு வெப்பமடைந்து விரிதல்பெற்று இலேசாகி மேலேசெல்லச்செல்ல அப்பகுதியை நிரப்பப்புறப் பக்கத் திலுள்ள புதிய குளிர்ந்தவாயு விரைந்துசெல்கின்றதென்ப தனைத் தெளிவாயறியலாம். ஆகவே, நமதில்லங்களிலும் இத்தன்மைய இயற்கை விதிகள் நாமறியாமலே ஓய்வின்றி நடந்துவருமாறும் பின்னர் ஓரிடத்துத் தெளிவுறக்காட்டுவாம்.

இனிவாயுமண்டலம் அசுத்தமாவதெங்ஙனம் என்று

விசாரிக்கப்புகுவாம். நம்மைச் சுற்றியிருக்கும் சாதாரணவாயு முன்னேயுரைத்த தொகுப்பாயுள்ள வாயுக்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுமன்றி, அளவுக்கதிகமாய்க் கரிவாயுவானும் அழுகிய விலங்கு, புல், பூண்டு முதலியவற்றின் அணுக்களானும், கரியோடுகூடிய அழுக்கு வாயுக்களானும், கட்புலனுக்குத் தோன்றாத தூசி, துரும்பு நுண்ணிய புழுக்களானும் அங்கணத்தி னின்று வெளிப்படும்வாயுக்களானும், இன்னும் சொல்லற்கரிய பலவேறு அசுத்தங்களானும், நிரம்பப்பெற்றுள தாமென உற்றுணர்வார்க்கு இனிதுவிளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/259&oldid=1574680" இலிருந்து மீள்விக்கப்பட்டது