உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, களுண்டாவதன்

ஞானசாகரம்

வ்வாறு அளவுக்கதிகமாக

ாவதன் காரணங்கள் பல

235

அசுத்தங் உளவேனும், ஈண்டு அவற்றுள் ஒருசில எடுத்துக்காட்டுவாம். நமது நெஞ்சில் எண்ணிலடங்காவணுத்துவாரங்களைப்பெற்ற சுவாசப்பை ஒன்று அமைந்திருகின்றது. வாயினுட் பக்கமிருந்து ஒருசுவாசக் குழாய் இப்பையினுட் செல்லுகின்றது. நாமுட்கொள்ளும் வாயு வழியானும் வாய்வழியானும் இச்சுவாசப்பையினுட் சன்று அத்துவாரங்களை நிரப்புகின்றது. இப்பையைச் சுற்றிமெல்லிய இதழ்போன்ற ஓர்தசையினாற் பிரிக்கப்பட்டு மிகச்சிறிய அநேக இரத்தக்குழாய்கள் யாண்டும்பரந்து கிடப்பதைக்காணலாம். தேகமெங்குமுள்ள அசுத்தவாயுக் கணிறைந்த இரத்தம் இக்குழாய்களை நிரப்பவிரைந்து வருகின்றதையும் பார்க்கலாம். இவ்வாறுவாயுவும் இரத்தமும் மெல்லிய தசையினானே பிரிக்கப்பட்டுச் சமீபித்தணைய அன்னப்புள் எங்ஙனம்பாலும் நீரும் கலந்தபானத்தில் பாலைநீரி னின்றும் பிரித்துப்பருகும் இயல்பினதோ, அங்ஙனமே இவ்விரத்தம் வாயுவின் தொகுப்பினுள் ஒன்றாகிய உயர்வாயு வைப்பிரித்துத் தான் கவர்ந்து, தன் அசுத்தங்களை வாயுவுக்கீந்து போதரும் இயல்பினதாயிருக்கின்றது. இச்செயல் இத்தகைய விநோதமாயின் இதனை இயக்குகின்ற பரமான் மாவின் நுட்ப ஞானத்துக்கோரளவுண்டோ சொல்லுமின்! இதுநிற்க.

இனி, வ்வாறுவெளிப்போந்த வாயுவின் தன்மை இன்னதென ஆராயப்புகின், இதன்கண்ணுள்ள கரிவாயு யற்கைக்கு நூறுபங்குக்கு மேற்பட்டும், நீர்வாயுமிகுந்தும், உடலிற்கொள்ளத்தகாத அழுக்குகள் பலவாயுவும் விரவிக் கிடப்பதைக் கண்டுணரலாம். ஒருசிற்றில்லின்கட் பலர்கூடிச் சிறிதுகாலங்கழிப்பரேல், அவர்களுக்கோர்

வகையான

ளைப்பும், மயக்கமுந், தலைநோயுமுண்டாவதைக் காண்போம். கற்கத்தாவில் இருணிறைந்த ஓர்சிற்றறை யிலோரிரவில் 46- மக்களடைபட்டுக்கிடந்து மற்றைநாட் காலையில் தளர்ந்துயிர்த் தோர் இருபத்து மூவரானவாறு நாம் சரிதவாயிலா கிவின்றோம். இச்சரித நிகழ்ச்சி அசுத்தவாயு மண்டலத்தினால் வருங் கேட்டையுணர்த்துமோர் அத்தாக்ஷி யாகுமெனின் வேறு கூறுவதென்னை? கரிவாயுவொன்றே இக்கேட்டைப் பயந்ததா மெனின். அற்றன்று; போதுமான உயிர்வாயுவின் அளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/260&oldid=1574681" இலிருந்து மீள்விக்கப்பட்டது