உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

8

மறைமலையம் -8

குன்றியதனாலும் வெளிவந்த கந்தகத்துக் கொப்பானவிஷ வாயுக்கள் முதலியனவற்றின் சேர்க்கை யானுமே அது நிகழ்ந்ததென்று ணரற்பாற்று.

இனி, ஒருகண்ணாடியைக் கையிற்கொண்டு, அதில் மூச்சுவிடுவோமாயின் அக்கண்ணாடியீரம்பட்டு மங்குதலைக் கண்ணுறுகின்றோம். ஆகையான், யாம்புறம்போக்கும் வாயுவின் கண் நீர்வாயுமிகவு முண்டென்று தெளிந்துணர்க.

மக்கள் இரவுகதவடைத்துத் தூங்கும் ஓரறையில் மற்றை நாட்காலையில் ஒருவன் கதவைத்திடீரென்று திறப்பானாயின், ஆண்டு ஒருவகையான நாற்றமுண் ாதலை யுணர்வான், சுத்தவாயுக்கு நாற்றமென்றகுணமில்லையாகவும் இந்நாற்றம் அவ்வீட்டில் கண்ணுள்ள வாயுவுக்கமைந்ததெவ்வாறெனின், ரவெல்லாம் அவ்வீட்டார் புறம்போக்கிய வாயுவின் அசுத்தம் ஆங்குநிறைந்துள்ள சுத்தவாயுவினுயர்வையழித்து அசுத்த மாகினதென்பதேயாமென உணர்ந்துகொள்க. இவ்வாறெல்லா முணர்ந்தும், அந்தோ! நம்மவருள் ஒருவன் பிணியுற்றிருப் பானேல் தமரெல்லாமவனைச் சூழ்ந்துநின்று அவன்மீது சுத்தவாயு வீசுவதைத்தடுத்துத் தம்சுத்தவாயுவை அவன்பால் விடுத்து நாலு நாளின் பின் நீங்குமுயிரை ஒரேநாளிற் போகச் செய்வது பேதைமையன்றோ?

6

இனி தீ மூண்டெரிவதனால், எரிபொருளிலுள்ள கரி, வாயுமண்டலத்துயிர் வாயுவோ சேர்ந்து கரிவாயுவாகி நம்மில்லத்தெல்லாம் பரந்துலாவும். அழிவுற்ற புல்,பூண்டு முதலியன உயிர்வாயுவோடு சம்பந்தமுறுதலால் உப்புவாயு சம்பந்தமுடையவாயுக்களும், கரிவாயுவும் இவைபோல்வன கரிவாயுவும்இவைபோல்வன பிறவு முண்டாவதற்கிட முண்டாகின்றது. அங் கணத்தினின்று புறப்படும்மிக்க துர்க்கந்தமுள்ள கந்தவாயு, வேறு பல நச்சுவாயுக்கள் முதலியவற்றை யளவின்றி யுண்டுபண்ணும். இவ்வாறு வாயுமண்டலம் யாண்டும் அசுத்தமாவதால் வருந்தீங்கு யாதென வினவுவார்க்கு அது பலவேறு பிணிகளைப் பயப்பதாகுமென விடுப்பாம். இத்தீமையால் வரும் நோய்கள் பலவுளவேனும் ஈண்டுச் சிலவற்றைத்தந்து சொல்வாம்; அவையாவன இருமல், காசம், கயம், சுரம், முறைக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மலக்கட்டு, வயிற்றுளைச்சல், பலக்குறைவு, தொண்டைப்புண், பெருமூச்சு மேல்மூச்சு முதலியனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/261&oldid=1574682" இலிருந்து மீள்விக்கப்பட்டது