உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

237

பிறவுமாம். இத்தன்மையவான நோய்களுக் கிடமாகிய வாயு மண்டலத்தைச் சுத்திசெய்ய முயல்வ தெவ்வளவு அவசிய மென்றுணர்ந்தவ்வாறு செய்யும் வழிகாண்க.

தாவரவர்க்கங்கானும்

இனி நம்மவர் முயற்சியாலொருவாறு வாயு சுத்திகரிக்கற் பாலதெனினும் இறைவன் இயற்கையிலேயே யனேகமுறையால் அதனைச் சுத்திசெய்யுமாறு காட்டுவாம். புல் பூண்டு முதலிய காற்றோட்டத்தினாலானும் மழை பனியினாலானும் ஒரு வாயுமற்றொன்றோடு கலத்தலானும் பூமிக்குப் பொருள்களைத் தன்னிடம் இழுக்கும் சக்தியுள தாதலானும் வாயுமண்டலம் சுத்தியடைகின்றது. புல்பூண்டு முதலிய தாவரங்கள் ஞாயிற்றின் ஒளியில் கரியைக் கரிவாயு வினின்றும் பிரித்துத்தான் உட்கொண்ட உயிர்வாயுவை வெளிப்போக்கும் சக்தியுடையதாகின்றது. ஆகையால் புல் ண்டுகள் கரிவாவின் பெரும்பாகத்தைத் தன்னியக்கத்தால் ஒழித்து உயிர்வாயுவைப் பெருகச்செய்து அது வாயுமண்டலத் தோடொற்றித்து மக்கட்குப் பயன்படச்செய்யுந்தன்மை மிக நுட்பமான முதல்வன் மகிமையை உணர்த்துமாறு அறிக. காற்றோட்டத்தினால் ஆவது என்னவெனின், யாம் முன்னர்க்கூறியவாறு, நம்மைச் சுற்றிலுமுள்ளவாயு இலேசாகி உயரச் செல்லுந்தோறும் புதியதும் குளிர்ந்ததுமாகிய சுத்தவாயு நம்மீது வீசி நமக்குச் சுகத்தை யுண்டுபண்ணகின்றது. இனி வாயுமண்டலத்திற் பரந்து திரியும் தூசிதுரும்பு கண்ணுக்குப் புலப்படாத நுண்புழுக்கன் முதலியனவும் மற்றும் ஆடி ஓடிதிரியும் அணுப்போன்ற பொருள்களும் மழைபனியினால் அடிபட்டு நிலத்தில் தாழ்த்தப்பட்டுத் தண்ணீர் வெள்ளத்தாலப் பாற்கொண்டு விழுத்தப்படுகின்றன.

டி. நல்லதம்பிப்பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/262&oldid=1574683" இலிருந்து மீள்விக்கப்பட்டது