உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

14. தமிழ்வேதபாராயணத்தடை மறுப்பு

மதுரைச்சில்லா பெரியகுளந்தாலுகாவைச் சேர்ந்த சின்னமனூரில் இவ்வருடம் வைகாசிமீ நடந்த பிரமோற் சவத்தில் சுவாமி வீதிக்கு எழுந்தருளிவருங்காலத்தில் அங்கே உள்ள சிவதீக்ஷைபெற்ற வேளாளர்கள் தமிழ்வேத மாகிய தேவாரதிருவாசங்களைப் பாராயணம் பண்ணிக்கொண்டு வந்தார்கள். வருங்காலத்தில் சுவாமி பிராமண அக்கிரகாரத் தில் எழுந்தருளுங்காலத்தில் எங்களுடைய அக்கிரகாரத்தில் இவ்வேளாளர்கள் தமிழ்வேதபாராயணம்பண்ணி வரக்கூடா தென்றும் அச்சொற்கள் எங்கள் காதிலேவிழக்கூடா தென்றுஞ்சொல்லி போலீசு இனிசுபெக்டர் மாஜிஸ்ட்ரேட் இவர்கள் சகாயங்களைக் கொண்டு லாவுக்கு விரோதமாய் நோட்டீசுகொடுத்து தடுத்திருக்கின்றார்கள். சற்கார் வீதியில் சுவாமிக்குப்பின் அவரவர்கள் கடவுளைத்தோத்திரம் பண்ணிக் கொண்டு வருவதைத் தடுத்தற்கு இவர்கள் உரியரல்லர். நமது ஸ்மார்த்தப்பிராமணர்கள்செய்த அறியாமைச் செய்கை அந்தோ கொடிது! கொடிது! இதுநிற்க.

சிவபிரான்செய்த காமிகாதி ஆகமவிதிப்படியே உற்சவம் பூசை முதலிய கிரியைகள் ஒவ்வொரு சிவாலயங்கள் தோறும் நடத்தப்பெற்றுவருகின்றன. இவ்வாகமம் எங்களுக்குப் பிரமாணமில்லையெனக் கூறுவாராயின் அவ்வாக மவிதிப்படி நடக்கின்ற ஆலயங்களில் இவர்கள்போய் வணங்கவும் உற்சவங் களில் சிவபிரானைத் தங்கள் வீதியில் வரவழைக்கவும் திசைவர்களைக்கொண்டு தீபாராதனை செய்விக்கவும் அவர்கள் கையில் விபூதிவாங்கவும் உரியரல்லர். வைதிகரி லொருசாரார் வேதம்பிரமாண நூல் என்றும் சிவாகமம் பிரமாணநூலன்றென்றும் சைவரிலொருசாரார் சிவாகமம் பிரமாண நூலென்றும் வேதமதுபோல்வதொர் பிரமாண நூலன்றென்றும் கூறுவர். நீலகண்டசிவாசாரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/263&oldid=1574684" இலிருந்து மீள்விக்கப்பட்டது