உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

239

அப்பயதீக்ஷதர்முதலிய ஆசிரியர்கள் நீலகண்டபாடியம் சிவாதித்தமணிதீபிகை சிவத்தத்துவவிவேகம் முதலியவற்றில் அவ்வைதிகரைமறுத்துச் சிவாகமப்பிராமாணியம் வலியுறுத் துரைத்திருக்கின்றார்கள். வேதமும் சிவாகமும் தம்முள்

வேறுபடா வேதந்தான்

வேதசிவாகமங்களுக்கு பேதங்கண்டிலேம் சிவாகமம் இரண்டுக்குங் கர்த்தாஒருவரே ஆதலாலும் ஒருபொருளுடையனவாதலாலும் இரண்டும் பரப்பிரமாணங்களே "வயந்துவேத சிவாகமயோர்பேதம் நபஸ்யாம வேதோபிசிவாகம" வேதத்தில் விபூதிதாரணம் உருத்திராக்கதாரணம் பஞ்சாட்சரசெபம் சிலலிங்கார்ச்சனம் தியானம் செபம் திரிபதார்த்த லக்ஷணங்கள் பஞ்சப்பிரமம் பிரணவம் பிராசாதமந்திரம் கூறப்பட்டிருப்பதுபோல ஆகமத்திலும் விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றது. வேதங் களுக்கு ஈசுவரன் எப்படிக்கர்த்தாவோ அப்படியே காமிகாதி ஆகமங்களுக்கும் கர்த்தா ஈசுவரன் என்று சூதசம்மிதை சிவமான்மியகண்டத்தில் முதலாவது அத்தியாயத்தில்

கூறப்பட்டிருக்கின்றது.

சூதசங்கிதை

சுலோகம்

“காமிகாதிப்ரபேதஸ்யயதாதேவோமஹேஸ்வர: ததாஸர்வபுராணாநாம்கர்தாஸத்யவதீஸுத”

மநுஸ்மிருதி

“ப்ரத்யக்ஷமநுமாநஞ்சசாச் த்ரஞ்சவிபியாகமம்

த்ரயம்ஸுவிதிதம்கார்யம்தர்மஸித்திமபீப்ஸிதேதி”

சூதசங்கிதையை ஸ்ரீசங்கராசாரியர் பதினெண்முறை பார்த்துப் பாஷ்யஞ்செய்தார் என்று ஸ்ரீவித்தியாரண்ணிய சுவாமிகள் சூதசங்கிதா தாற்பரியதீபிகையில் கூறியிருக் கின்றார்கள்-

அற்றேல் வேதம் நித்தியமென்னுஞ்சுருதிகளோடு முரணும் பிறவெனின், முரணாது; நித்தனாகிய பரமசிவனாற் செய்யப் பட்டமையானும் இறுதிக்காலத்துப் பரமசிவனிடத் தாடுங்கிய வேதம் படைப்புக்காலத்து முன்போலவே தோன்றுதலானும் நித்தமென்றுபசரித்துக்கூறப்படுமாகலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/264&oldid=1574685" இலிருந்து மீள்விக்கப்பட்டது