உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 8

சிவாகமங்களை நித்தமென்பதும் இக்கருத்தே பற்றியென்க. அங்ஙனமல்லாக் கால் வேதம் பரமசிவனாற்செய்யப்பட்டது என்னுஞ்சுருதி களோடும் அட்டாதசவித்தைக்கு முதற் கருத்தாவாகிய இச்சூலபாணி என்றற்றொடக்கத்துப் புராணவசனங்களோடு முரணுமாறறிக. வேதம் அறிதற்கருவி வித்தை பதினெட்டாவன இருக்குமுதலிய வேதநான்கும், சிக்கை கற்பசூத்திரம் வியாகரணம் நிருத்தம் சந்தோவிசிதி சோதிடமென்னும் அங்கமாறும், புராணம் நியாயநூல் மீமாஞ்சை மிருதி யென்னுமுபாங்கநான்கும், ஆயுள்வேதம் வில்வேதம் காந்தருவவேதம் அருத்தநூலென்னுமிருக்கு முதலியவற்றிற் குபவேதநான்கும் எனவிவை. இவற்றுள் வேதநான்கும் பிரமகாண்டமும் பிரமஞானத்திற்கு நிமித்தமான கரும காண்டமும் முணர்த்துவனவாம். சிவாகமங்களும் பிரமகாண்ட மாயடங்குமென்பர். இப்பதினெட்டு வித்தை களுள் சிவாகமம் கூறப்படவில்லையேயெனின் அப்பயதீக்ஷதர் புராணசப்தத்தில் சிவாகமும் அடங்குவனவாமென்று பொருள்படுத்தினார். வேதங்களை யெடுத்தல் படுத்தல் முதலிய விசை வேறுபாட்டா னுச்சரிக்குமாறுணர்த்துவது சிக்கை வேதங்களிற்கூறுங் கருமங்களை யநுட்டிக்குமுறைமை யுணர்த்துவது கற்பசூத்திரம். வேதங்களினெழுத்துச் சொற்பொருளியல் புணர்த்துவது வியாகரணம். வேதங்களின் சொற்பொருளுணர்விப்பது நிருத்தம். வேதமந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவற்றிற்கு எழுத்து னைத்தென்றலும் உணர்த்துவது சந்தோவிசிதி. வேதத்திற்கூறுங் கருமங்கள் செய்தற்குரிய காலவிசேடங்களை உணர்த்துவது சோதிடம். இங்ஙனமாகலின் இவையாறும் வேதத்திற்கு அங்கமெனப் பட்டன. பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேதவாக்கியப் பொருள் களை வலியுறுத்து விரித் துணர்த்துவது புராணம். இதிகாசமும் ஈண்டடங்கும் வேதப்பொருளை நிச்சயித்தற்கனுகூலமான பிரமாண முதலியவற்றை உணர்த்துவது நியாயநூல். வேதப் பொருளின்றாற்பரிய முணர்தற்கு அநுகூலமான நியாயங்களை மீமாஞ்சை; அது பூருவ

ஆராய்ச்சிசெய்துணர்த்துவது

மீமாஞ்சை உத்தரமீமாஞ்சையெனவும் முன்னையது வேதமெனவும் பின்னையது வேதாந்தமெனவும்படும். அவ்வவ் வருணங்கட்கு நிலைக்குமுரிய தருமங்களை யுணர்த்துவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/265&oldid=1574686" இலிருந்து மீள்விக்கப்பட்டது