உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

241

மிருதிநூல்.புராணமுதலிய நான்கும் வேதத்திற் குபாங்கமெனப் படும். எல்லாம நுட்டித்தற்குச் சாதநுமானயாக்கையை நோயின்றி நிலைபெறச்செய்வது ஆயுள்வேதம். பகைவரானலி வின்றி யுலகங்காத்தற்கு வேண் வேண்டப்படும். படைக்கலம் பயிறலையுணர்த்துவது வில்வேதம். எல்லாக்கடவுளர்க்கு மூவகைவரச்செய்யுமிசை முதலியவற்றை யுணர்விப்பது காந்தருவவேதம். ம்மைக்குமறுமைக்கு மேதுவாகிய பொருள்களையீட்டு முபாயமுணர்விப்பது அருத்தநூல். இவை நான்குமுபவேதமெனப்படுமென்றுணர்க. வேதமெனப்படும் பூருவமீமாஞ்சை பன்னிரண் டத்தியாயமாகச் சைமிநிமுநிவராற் செய்யப்பட்டது. வேதாந்தமெனப்படும் உத்தரமீமாஞ்சை நான்கு அத்தியாயங்களையும் பதினாறுபாதங்களையும் நூற்றைம்பத்தாறு அதிகரணங்களையும் ஐஞ்ஞூற்றைம்பத் தைந்து சூத்திரங்களையும் உடையது. இந்த வேதாந்த சூத்திரம் வியாசமுநிவராலே துவைதவாக்கியரூபமாகச் செய்யப்பட்டது. என்னை வேதத்தைமூலமாகவுடைய சிவாகமசாரபூதமான பன்னிரண்டு சூத்திரங்களையுடைய சிவஞானபோத சாஸ்திரத்தை திருநந்திதேவர் அடைந்ததுபோல மநுவந்தரங் களிலே யுகந்தோறும் உண்டான வியாசமுநிவர்கள் பரம சிவஞானசித்தியின்பொருட்டு விபூதி ருத்திராக்ஷங்களை உடல் முழுவதும் அணிந்தவர்களாகித் திருக்கைலாசமலையை யடைந்து சிவபிரான் றிருவடித்தியானத்தினாலே அப்பெரு மானிடத்தினின்று சூத்திரங்களை அடைந்து பிராமாணிய வாதங்களைச் செய்கின்றார்கள் என்றும் இவ்விடத்திலே சூத்திரங்களென்பது சிவஞானபோதசாஸ்திரத்து வாதச் சூத்திரங்களே. பாணிநிமுநிவர் அகஸ்தியமகாமுநிவர் முதலி யோர்களால் அடையப்பட்ட மகேசுவர சூத்திரந்திரமிடசூத்திர முதலியவைகளால் உபநிடத சித்தாந்தத்தை அறிதற்குக்கூடா மையால் என்றும் மணியசிவனார் இயற்றிய வித்தியாவிருத்தி யிலே கூறப்பட்டமையால் துவைதவாக்கிய ரூபவேதாந்த சூத்திரத்துக்கு அவ்வாறே ஸ்ரீகண்டசிவாசாரியர் பதி பசு பாச மென்னு முப்பொருளும் முத்திநிலையினு முண்மைவிளங்க முதலிலே பாஷ்யஞ்செய்தார். சங்கராசாரியர் சைவசித்தாந்தத் தில் உண்மைக்கருத்துடையராயினும் மாயாவாதிகள் வேண்டு கோளுக்கு இசையத் தமது வித்தியாசாமர்த்தியம் விளங்கக் கேவலாத்துவிதபரமாகப் பாஷ்யஞ்செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/266&oldid=1574687" இலிருந்து மீள்விக்கப்பட்டது