உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

243

களுக்குக் கர்த்தாஒருவரேயாமாயினும் பிருகஸ்பதிசொல்லிய ஸ்மிருதியும் உலோகதாயத சூத்திரமும் முறையே பிராமா ாணி யமும் அப்பிராமாணியமுமாய் முற்றுமாறுபோல வேதசிவாக மிரண்டும் பேதமுறாவோவென ஆக்ஷேபித்துச் சமாதானங் கூறுகின்றார். அவ்விரண்டும் ஒரேபொருளுடையனவாம். எங்ஙனமெனின் பிரணவம் ஓம்எனச் சாந்தோக்கியாதி உபநிடதங்களிலும் பசுபாசபதி வியவகாரங்கள் சுவேதாசுவதர மந்திரோபநிடதத்தினும் பஞ்சாக்கரமந்திரம் யசுர்வேதசங்கிதை யாலும் பஞ்சப்பிரமம் சர்வ வித்தைகளுக்கும் ஈசானர் யசுர்வேத ஆரணியகத்திலும் அதர்வசிரசு காலாக்கினிருத்திரம் பிருகசாபாலமுதலிய உபநிடதங்களில் பஸ்மோத்தூளன திரிபுண்டாருத்திராக்ஷ தாரணங்களும் இருக்குவேதத்தில் இலிங்கார்ச்சனமும் சிவாகமங்களிற் போலக் காணப்படுதலில்லை.

என்றற்றொடாக்கத்து

வேதசிவாகம மிரண்டும் ஒரு பொருளுடையனவாய்ப் பரமப் பிராமாணியங்களாம். அற்றேல் அற்றேல் முதல்வனால் வேதம்என ஒன்றுபடுத்துக்கூறாது வேதம் ஆகமம் என இருவகைப்படுத்துக் கூறியது. என்னையெனின் அஃதொக்கும் முதல்வன் பெருங்கருணையாளனாகலின் உலகத்தார் உய்தற்பொருட்டும் சத்திநிபாதமுடையார் உய்தற்பொருட்டும் திருவுளத்திற்கருதிப் பொருள்பலபடத் தோன்றுஞ் சூத்திரமும் அதனை அவ்வாறாகவொட்டாது தெளித்துரைக்கும் பாடியமும்போல முறையே வேதமும் சிவாகமும் செய்யப் பட்டன. அவ்விரண்டும் முறையே பொதுநூல் என்றும் சிறப்பு நூல்என்றும் கூறப்படும். அவ்வாகமம் சிரௌதம் சுதந்திரம் என இருவகைப்படும். வேதத்திற்கூறிய படியே கூறுவது சிரௌதம் கூறியதேயன்றி விசேடமாக கூறாததையும் விரித்துக்கூறுவது சுதந்திரம். இப்படிப்பட்ட உத்கிருஷ்டமாகிய சிவாகமங்களுள் முதலாவது ஆகமமாகிய காமிகாகமத்தில் நான்காவது படலத்தில் 437, 438, 439வது சுலோகங்களால் வேதாத்திய யனகவுடபாஷா ஸ்தோத்திரங் களோடு திராவிடபாஷையில் அடியார்கள் ஸ்தோத்திரமும் செய்யுமாறு கூறப்பட்டிருக் கின்றன. அன்றியும் சிவாலயங் களிலும் மடாலயங்களிலும் சிவபக்தர்களைப் பிரதிட்டைபண்ணிப் பூசிக்கவேண்டு மென்றும் அவர்களுக்கு உற்சவாதி முதலிய நைமித்திகக்கிரியை களையும் நடத்தவேண்டு மென்றுங் கூறப்பட்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/268&oldid=1574690" இலிருந்து மீள்விக்கப்பட்டது