உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் லயம் – 8

சிவபக்திஸமோபேதாஜீவந்தோவாம்ருதாஸ்துவா தேஷாம்ப்ரதிக்ருதிம்க்ருத்வாப்ரதிஷ்டாப்யஸமேர்ச்சயேத்” பக்தோத்ஸவம்ப்ரகுர்விதம்பக்சாத்ப்ரக்வாசிவஸ்யது

சகலாகமசங்கிரகத்தில் நித்தியபூசாபிராயச்சித்த விதியில் ஆராதனை உற்சவ முதலிய காலங்களில் வேத பாராயணம் பஞ்சாங்கசிரவணம் அன்பர்கள் ஸ்துதிசெய்ய வேண்டு மென்றுங் கூறப்பட்டிருக்கின்றன. அப்படிச்செய்யாத பட்சத்தில் மகாமாரி முதலிய நோயால் உலகத்துக்குக்கெடுதி விளையு மென்றுங் கூறப்பட்டுள்ளது. அதற்காகச்சாந்தி ஓமமுதலிய பிராயச்சித்தம் செய்யவேண்டுமென்றுங் கூறியிருக்கின்றன. ஆதலால் மனிதர்களில் உயர்ந்த சிவபக்தர்கள் யாவர்என்று ஆ ஆலோசிக்கும் பட்சத்தில் சிவரகசியம் உபமன்னியு

பக்தவிலாசம் அகத்திய பக்தவிலாசமுதலிய நூல்களிற்கூறிய அறுபத்துமூவர் களேயாம்.

“வேதபாராயணே ஹீநேபஞ்சாங்கச்ரவணேததா பக்தாதிஸ்தோத்ரஹீநேதுமஹாமாரிப்ரவர்த்ததேதத்தோஷி

சமாநார்தாயஸ்நபநம்சாந்திஹோமகம்”

ஸ்ரீ சங்கராசாரியசுவாமிகள் சௌந்தரியலகரியிலே பூதரகுமாரியே தயாவதியாகிய உன்னாலே கொடுக்கப்பட்ட பாலை ஞானசம்பந்தர்பருகி நிபுணகவிகளுள்ளே விரும்பத் தக்க கவிசெய்வாராயினார் எனத்துதிக்கப்பட்டார் என்றும் பஞ்சாக்கரத்தைப் பத்துத் திருப்பாடல்களினால் அருளினார் என்றும் திருச்செங்காட்டங்குடியில் பத்துத்திருப்பாடல்கள் அருளினார் என்றும் பத்தவிலாசத்தில் அங்கங்கே கேட்கப் படுதலானும் அகத்திய சங்கிதையில் குற்றமில்லாத திராவிட கானங்களால் சம்புவைத்துதித்தாரெனக் கேட்கப்படுதலானும் ஆன்மார்த்த பரார்த்த பூஜோற்சவகாலங்களில் வேதாத்தி யயனத் தோடு திராவிடதேவாராதி ஸ்தோத்திரமும் அவசியஞ் செய்ய வேண்டுமென்பது பெறப்படுகின்றது. இவைகளை யெல்லாம் நோக்கியே ஆன்றோர்கள் ஒவ்வொரு சிவாலயங் களிலும் பூசை உற்சவமுதலிய காலங்களில் தேவாரமுதலிய அருட்பாக்களை ஓதும்படி ஓதுவார்களை ஏற்படுத்தி யிருக்கின்றார்கள். அப்படியே உற்சவத்தில் திருவையாறு சிதம்பரம் மதுரை திருவாரூர் முதலிய சிவஷேத் திரங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/269&oldid=1574692" இலிருந்து மீள்விக்கப்பட்டது