உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

245

வேதபாராயணத் துக்குப்பின் தேவார முதலிய அருட்பாக்களை ஓதி வருகின்றார்கள். இவைகளை யெல்லாம் நமது ஸ்மார்த்தப் பிராமணர்கள் தெரிந்திருப்பார் களாயின் தடைசெய்திருக்க மாட்டார்கள். இனிமேலாவது மேற்குறித்த சிவஷேத்திர களுக்குச் சென்று அங்கங்கே நடக்கும் உற்சவங்களில் வேத பாராயணஞ்செய்துவருவதையும் கண்கூடாகப்பார்த்துவந்து தங்கள்ஊரில் நடக்கும் தமிழ்வேத பாராயணத்தைத் தடை செய்வதாகிய சிவத்துரோகத்துக்கு ஆளாகாதிருப்பர்களென்று நம்புகின்றேன்.

தமிழ்வேதபாராயணத்தடைமறுப்பு

சுபகிருதுவருஷம்

ஆனிமீ 12

முற்றிற்று.

இங்ஙனம்

மதுராபுரிவாசி

சுப்பிரமணியபிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/270&oldid=1574693" இலிருந்து மீள்விக்கப்பட்டது