உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

15. வடமொழியிலுள்ள தமிழ்ச்

சொற்களுக்குக் காரணம்

ஏழாவது இதழில் பலகைமுதலியன தென்மொழிக்கண் தொன்று தொட்டுக் காரணக்குறி மரபுப்பெயராக வழங்கலின் என்றதை யீண்டுவிளக்குகின்றாம்.

பலகை, பால் (பிரிவு) பலகை; பகு பாகு பாகம்

பலகம்; பகு பகல் பகலம் பலகம்; ஒருமரத்துண்டைப் பலவாகப் பகுப்பது.

வல்லுப்பலகை, கேட்கப் பலகையென்ப வற்றுக்குத் தனித்தனி தாது வேறாகும்.

கட்டில், அறைக்கட்டில் (அறைக்குட்கட்டுவீடு; என்பது) அறைக்கட்டிலுற்சவம் என்ற வழக்குமுளது

நத்தம் நந்துதல் (கெடல்)

விசிறி விசறற்கருவி, அது விசிறியென மரீஇயது.

நிகளம் கரு காளம் (இரும்பு) இருப்புவிலங்கு, இருப்புச் சங்கிலி, யானைச் சங்கிலி, நி, உபசர்க்கம்

ஆணி அள் (கூர்மை) கூரியது

சூரணம் தூள் சூள் சூணம் சூரணம்

அசி (வாள்) அள் கூர்மை கூரியது

கார்முகம் (வில்) கால் (கூர்மை) கூரியமுகமுடையது

கரமஞ்சரி கரவாளம் காரைச்செடி காறுமுதலியனவும்

அத்தாதுவிற் பிறக்கும்.

வாணம் வள் (கூர்மை) கூரியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/271&oldid=1574694" இலிருந்து மீள்விக்கப்பட்டது