உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

249

தட்டை (தாள்உட்டுளை) தண்டு தட்டை (மூங்கில்) மூங்கில்போல் பிளவுபட்ட மனமுடையானென்பது

தோள், (கை) தோல் (பிரிவு) விரற்பிரிவுடையது; தொழல் தொழில் துதி துதித்தல் முதலியன அத்தோளிற்பிறக்கும். அது புயத்துக்காயிற்று

நனி, (மிக) நாலம் (ஞாலம்) நனி நன்றுபெரிது ஞாலம் போற்பெரிது; மகா மகி மிக என்பவற்றானுமுணர்க.

கணக்கு, கால் (நுண்மை) நுணுகியறிவது

நாவாய், (கப்பல்) நா (நடு) கடனடுவில் வாய்ந்துசெல்வது

மீன், மின் மின்னுவது; மீனமென்னும் சொல் பழைய வடமொழி நிகண்டுகளில் இல்லையென்பர், அது வடமொழி யாயின் வல்லெழுத்துறழ்வே'

“மீனென்

கிளவி

எனச்சூத்திரியார் தொல்காப்பியர்

அதர் அள் (நெருக்கம்) இடுக்குவழி, அத்தம் (விசாலம்) அத்வா எனலும் ஒக்கும்

குட்டிகை (சிறுசுவர்) குள் சிறிது குட்டி குட்டிச்சுவர் குட்டிகைச்சுவர்,

குரகம் (வீடு) குகம் (குகை); அனுக்குரகம்; அனுக்கிரகம், கிருபம், கிருபை, கிருபாலு என்பன அதிற்பிறக்கும், என்னெனின் அது முனிவர்வாசகமாகலின் என்க. தானித்தன்மை தானத்துக் காயிற்று.

அக்கரம், அகரமென்பதன் திரிபு, அகரமென்னும் ஓரெழுத்தினின்றே எல்லா வெழுத்துக்களும் பிறத்தலின் அப்பெயர்த்து, அட்சரமென்பது அக்காமாயின தன்று. இனி அக்கரம் கரம் ரகம் ரேகம் ரேகை லேகம் லேகை, லேகிணி, லேக்கன்; லேகம் லிகம் லிகிதம் கரலிகிதம் ககிதம் காகிதம் கடிதம்; லிகிதம் லிபி லிஸ் முதலியனவும் பிறவும் பிறத்தலின் அக்கரமென்பதே அட்சரமாயிற்றென்க. அகரத்தின்பெருமை அளப்பரிதாகலின் ‘அகரமுதலவெழுத்தெல்லாம்' அகர முதலாவானை, “அகரவுயிர்போல்' எனப்பெரியாருரைத்தனர். அதனையீண்டுக் கூறப்புகின் மிகவிரியும். அச்சரம் அச்சு (எழுத்து) அச்சுக்கூடம் அத்தாரம் முதலியவும் அதன்திரிபு. ஆதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/274&oldid=1574697" இலிருந்து மீள்விக்கப்பட்டது