உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

16. சிகந்திராபாத் சித்தாந்த ஞானபோத

சங்கம்

அன்பார்ந்த ஐய!

இத்தலைப்பெயரிய ஓர் சற்சங்கம் இம்மாநகரத்தில் 1892u ஜூன் மீ15-ந்திகதி கூடிய சுபதினமாகிய பாநுவாரத்தில் சிவஞானதானவள்ளலாகிய ஸ்ரீமத் சோ. சிவ அருணகிரி முதலியா ரவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அன்று அழைப்புப் பத்திரத்தில் கண்டபடி சிவாபிமானச்செல்வர்கள் பலரும் னைய சமயிகளும் திரள்திரளாகக்கூடியபோது எமது வள்ளலாரானவர் மானிடப் பிறவியினருமையைப்பற்றி அற்புதமாகப் பிரசங்கஞ் செய்தனர். அதனைச்செவிமடுத்த யாவரும் ஆநந்தப்பரவசராய் மெய்மறந்து விளங்கினார்கள். பின்னர் முதலியாரவர்கள் ஒவ்வொரு ஆதிவாரமும் சங்கத்தில் சிவஞானத்தேனை யூட்டுவதாகவும், முதல்முதல் திருத் தொண்டர் புராணத்தின் ஓர் பகுதியாகும் அப்பூதியடிகளார் திவ்விய சரித்திரத்தைப் பிரசங்கஞ்செய்வதாகவும், மாதமொரு முறை சித்தாந்த நலங்கள் அடங்கப்பெறும் துண்டுப்பத்திரிகை எழுதி வெளிப்படுத்துவ தாகவும் வாக்களித்தனர். அப்படியே புராணபடனம் கிரமமாக நடந்தேறி வருகையில் வாதவூர்ப் பெருமான் திருநட்சத்திரம் அணிமைத்தாக அன்று அவ்வாசிரிய சிகாமணியாரது திவ்வியசரித்திரப் பிரபாவத் தையும் பக்தியின்றிறத்தையும் வீடுபேற்றினருமையையும் யாவருங் கேட்டுக் கண்ணீரும் கம்பலையுமடையும்படி பிரகாசப்படுத்தினர். அதனைச் சிரவணித்த அன்பர்கள் யாவரும் பேரானந்தப் பெருவாழ் வளிக்கும் சிவஞானத்தேனின் பிரபாவம் இ னைத்தென வியம்பல் எளிதோவென்று புகழ்ந்தார்கள். பிரசங்கமுடிந்த வநந்தரம் “சித்தாந்த ஞான போதவிளக்கம்” என்னும் இரண்டாவது துண்டுபத்திரிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/281&oldid=1574705" இலிருந்து மீள்விக்கப்பட்டது