உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

257

விநியோகஞ் செய்யப்பட்டது. பிறகு கிரமமாக அப்பூதி யடிகளார் புராணம் முடிவுபெற ஸ்ரீமதி காரைக் காலம் மையார் சரித்திரம் துவக்கப்பட்டது. அம்மையாரது தலையன்பின் பிரபாவம் பிரசங்கிக்கப்பட்டு வருகையில் நமது வேந்தராகிய எட்வர்ட் சக்கரவாத்தியாரது பட்டா பிஷேகதினங்குறுக அன்று (9-ஆகஸ்ட்-1902) காலை 11 மணிக்கு சுமார் 150 ஏழைகளுக்குமேல் அன்னமளிக்கப்பட்டது. சாயரட்சை 6-30 மணிக்குமேல் நமது மன்னரது செங்கோல் நீடூழி நிலைத் திருக்கவும் அவருக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீடித்தவாயுளும் உண்டாகவும். ஸ்ரீநடராஜப் பெருமானது சந்நிதானத்தில் தமிழ்வேத பாராயணம் நடத்தப்பட்டது. அடுத்தநாள் ஸ்ரீ சுந்தரமூர்த்திசுவாமிகள் திருநட்சத்திர மாதலால் அன்றைய தினமும் எமது ஞானதானவள் ளலாரானவர் வன்றொண்டப் பெருமானது சரித்திரப் பிரபாவத்தை யாவரும் எளிதிலுணரு மாறு சுருக்கமாக விளக்கி அமிர்தவாரிபெய்தனர். அன்றியும் லோகோபகாரமாக தாம் எளியநடையிலெழுதிய "வேதாந்த சித்தாந்த சமரசநிலை விளக்கம்” என்னும் மூன்றாவது துண்டுப் பத்திரிகையையும் சிரவணஞ்செய்த அன்பர்கள் யாவருக்கும் விநியோகப் படுத்தினர். இவரது சிவஞானதானம் யாவராலும் வியக்கத் தக்கதாய்ப் பிரகாசித்தொளிர்கின்றது. இவராலே ஸ்தாபிக்கப் பட்ட இச்சங்கத்துக்கு இரண்டு திங்களுக் குள்ளாகவே 30 அங்கத்தவர்களும் கரவாபிமான சீலர்களும் சேர்ந்துள்ளார்கள். இவர்கள் யாவரும் ஒருங்குசேர்ந்து இச்சங்கம் நீடித்திருக்கவேண்டு மென்று திருவருளையுன்னி நீங்கா முயற்சியும் தூங்காத் துணிவும் கொண்டுள் ளாரென்றால் இதன் பெருமையைச் சொல்லவும் எளிதோ. சங்கத்துக் காரியதரிசியாராகிய ஸ்ரீமான் ஆ. கங்காதர முதலியார் அவர்களது நன்முயற்சி எல்லாராலும் கொண்டாடத் தக்கது. சங்கத்தின் முக்கியகருத்துகளாவன:-

சில

1. ஆதிவாரந்தோறும் புராணப்பிரசங்கஞ்செய்தல்.

2. சுக்கிரவாரந்தோறும் தமிழ்வேதபாராயணஞ்செய்தல். 3. சோமவாரம், புதவாரம் சனிவாரங்களில் சித்தாந்த சாஸ்திரங்களை யோது வித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/282&oldid=1574706" இலிருந்து மீள்விக்கப்பட்டது