உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் 8 –

4. கிர்த்திகைநட்சத்திரந்தோறும் குகப்பெருமானது ஆலயத்துக்குச்சென்று தமிழ்வேத பாராயணஞ்செய்தல்.

5. மாதமொருமுறை ஏழைகளுக்கு அன்னமளித்தல்.

6. பிரதிமாதம் சித்தாந்த ஞானமணம்வீசும் துண்டு பத்திரிகையை வெளிப்படுத்தல்.

7. ஒவ்வொரு அங்கத்தவர் இல்லந்தோறும் பிடிஅரிசிக் கலையம் வைத்து வாரமொருமுறைத் திரட்டி காசி முதலிய க்ஷேத்திர யாத்திரைகாரர்களுக்கும் அமுதளித்தல்.

சிகந்திராபாத்

12-8-02.

இங்ஙனம்

ப. கதிர்வேலு முதலியார். உதவிகாரியதரிசி.

ஐய,

நீங்கள் அன்புடனனுப்பிய திருவொற்றி வாற்றி முருகர் மும்மணிக்கோவையும் கடிதமும்பெற்று எல்லாம் தெரிந்து

கொண்டேன்.

மும்மணிக்கோவையிற் சிலபாகம் படித்தேன். அது உங்களுக்குப் பத்துப் பாட்டு முதலியவற்றுள் மிக்க பயிற்சியையும் 6 ஞாபகசக்தியையும் நன்குபுலப்படுத்தி, மகிழ்ச்சியை விளைவித்தது. மற்றவற்றை அவகாசத்திற் பார்ப்பேன்.

கும்பகோணம் வே. சாமிநாதன்.

அன்புமருமையுமுடைய ஐய,

66

காஞ்சியாக்கம்” கண்டுமகிழ்ந்தேன். அதன் நியாய தண்டத்தால் பிறர்போலிக் கண்டனங்கள் பொடியாயின வென்பது திண்ணம். போலிப்புலவர்தம் பொய்யுபசாரங்கள் குறிப்பிட்டுத் தாங்கள் எழுதியவையுண்மை; அதுவேயான் கொண்டபொருளும்"

டி.சவரிராயன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/283&oldid=1574707" இலிருந்து மீள்விக்கப்பட்டது