உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

325

ஏதுவுமான வேள்விமுதலிய நல்வினை தீவினையென்னும் இரண்டுவினையும் தலைமைக்குணங்கள் இல்லையாயினாரை உடையரெனக்கருதி அறிவிலார் கூறுகின்ற பொய்மைசேர்ந்த புகழ்கள்போலாது அவ்விறைமைக்குணங்கள் முற்றவுமுடைய முதல்வனது புகழை எப்பொழுதும்

மெய்மைசேர்ந்த

வாக்கினால் வாழ்த்துவார்மாட்டு உளவாகா.

காயத்தினால் வழிபடுதல்

6

தன்வயத்தனாதலாகிய சுவதந்திரத்துவம், தூயவுடம் பினனாதலாகிய விசுத்த தேகம், இயற்கையுணர்வின னாதலாகிய நிராமயான்மா, முற்றுமுணர்தலாகிய சர்வஞ் ஞத்துவம், இயல்பாகவே பசாங்களினீங்குதலாகிய அநாதி போதம், பேரருளுடைமையாகிய அலுப்தசத்தி, முடிவிலாற் றலுடைமை யாகிய அநந்தசத்தி, வரம்பிலின்பமுடைமை யாகிய திருப்தி என்று சிவாகமங்கள் எடுத்தோதும் எண்வகைக்குணங் களையுடைய முதல்வனது திருவடிகளை வணங்காத முடிகள் தத்தமக்கேற்ற சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தங்களாகிய விடயங்களைக் கொள்கையில்லாத சுரோத்திரம் துவக்குசட்சு, சிகுவை ஆக்கிராணங்களாகிய பஞ்சேந்திரியங்களைப்போலப்

பயன்படுதலுடையனவல்ல.

திருநாவுக்கரசுநாயனார் தேவாரம்

எட்டுமூர்த்தியாய் நின்றியலுந் தொழில் எட்டுவான்குணத் தீசனெம் மான்றனை எட்டுமூர்த்தியு மெம்மிறை யெம்முனே எட்டுமூர்த்தியு மெம்மூ ளொடுங்குமே.

சுந்தரமூர்த்திநாயனார் தேவாரம்

இரும்புயர்ந்த மூவிலையசூலத்தினானை யிறையவனை மறையவனை யெண்குணத்தினானைச், சுரும்புயர்ந்தகொன்றை யொடு தூமதியஞ்சூடுஞ் சடையானைவிடையானைச் சோதி யெனுஞ்சுடரை, அரும்புயர்ந்தவரவிந்தத் தணிமலர் களேறி யன்னங்கள் விளையாடு மகன்றுறையினருகே, கரும்புயர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/350&oldid=1574776" இலிருந்து மீள்விக்கப்பட்டது