உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

341

வேறுபடுவதன்றென்பதற்கு அவர் அதன் முதனூலாகிய திருநான் மறைமுடி'வைக் கிளந்தோதலே சான்றாதல் காண்க.

-

99

இனி, 'முனிமொழியும்' என்பதில் ‘முனி' என்னுஞ் சொல்லுக்கு ‘வியாதமுனி' என்று பொருள்கோடல் யாங்ஙனம்? அகத்தியர்முதற் பிறருமுளராலோவெனின்; அற்றன்று, உலகமெல்லாம் ஒருங்குதிரண்டு பழிச்சும் பெருமையராயினும் அவர்க்கு வேத அகத்தியர் வேதவசிட்டர் வேதகௌதமர் எனப் பெயர்வழங்கக் கண்டிலம். வியாதமுனிவரையே வேதவியாசர்- வேதமுனிவர் என்று வழங்கக் காண்டலானும், வேதத்தி லிவர்க்குள்ளவுரிமை வேறுபிறர்க்கிருப்பக் காணாமையானும், சைவ எல்லப்ப நாவலர் “மிக்க வேதவியாசர் விளம்பிய” எனவும், வில்லிபுத்தூரார் "முனிராஜன் மாபாரதஞ் சொன்னநாள் எனவுங், கச்சியப்பசிவாசாரியார் “கரையறுவேதமாங் கடலை நான்கவாய்ப், பிரிநிலையாக்கியே நிறுவுபெற்றியாற், புரைதலிர் முனிவரன் புகழ்வியாதனென், றொருபெயர்பெற்றனனுலகம் போற்றவே" எனவும், கூறுதலானும் 'முனி' என்னுஞ் சொல்லுக்கு 'வியாதமுனிவர்' என்றுகோடலே பொருந்துவதா மன்றி வேறு கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தா தென் றொழிக. அல்லதூஉம், பரந்துகிடந்த வேதப்பொருளை யெல்லாம் ஒருங்குதிரட்டிப் பாகுபடுத்துதவிய அவ்வியாசரை வேதமே 'ஸஹோவாசவ்யாஸ: பாராஸாய:' என்னும் வாக்கியத் தால், பராசரகுமாரராகிய வியாசர் பொய் சொல்லாதவ ரென்றினிது புகழ்ந்தோதுதலானும், ஸ்ரீமத் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் இவரை “ஆல்வரு கடவுளை யனையதன்மையான் என்றுரைத்தலானும் அங்ஙனம் பொருள்கோடலே ஔவை யார்க்குக் கருத்தாமென்பது இனியேனுமுணர்ந்து கொள்க. குணமென்னுங் குன்றேறிநின்றவிவ் வியாத முனிவர் இயற்றிய சூத்திரமும் அதன்முதனூலாகிய, வேதாந்தமும் ஒரு நெறிப்பட்டுச் சைவ சித்தாந்தப்பொருளே போதிக்குமென்பதனை விளக்கிய வன்றே ஒளவையார் அவற்றை ஏனைச்சைவநூல்களோ டொருங்கு தலைப்பெய்து “ஒருவாசக மென்றுணர்” என்று கூறுவா ராயிற்றென்பது.

இனி, வேதாந்தசூத்திரம் மாயாவாதப்பொருளையே போதிக்குமென்பார்க்கு, அவ்வேதாந்த சூத்திரத்தின் முதனூ லாகிய உபநிடதங்களும் அப்பொருளையே போதிக்கு மென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/366&oldid=1574792" இலிருந்து மீள்விக்கப்பட்டது