உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

13

காண்டு செய்யுஞ் சகளோ பாசனைச்சன்மார்க்க நன் முறையையே இகழுதல் பொருந்தாது.

பெயரோடுகூடிய

ரிய

மேலும், ஆரியர்களாகிய நன்மக்கள் சூரியனை வழிபடும் போது அச்சூரியனை ஒரு சரீரமாகவும், பர்க்கன் என்னும் இறைவனை அச்சரீரத்தினுள் ஓர் ஆன்மாவாக வுங்கொண்டு உபாஸிப்பர். பிறர் அங்ஙனங் கொள்ள அறியாமல் சூரியனையே பரமான்மாவெனக் கொண்டு உபாஸிப்பர். ஆரியர் சந்திரனை வழிபடும் போது அதனை ஒரு சரீரமாகவும், சோமன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அதனுள் வியாபித்த பரமான்மாவாகவுங் கொண்டு உபாஸிப்பர்.பிறரோ சந்திரனையே பரமான்மாவாகத் துணிந்து உபாஸிப்பர். பிறரோ அச்சீவான் மாவையே பரமான்மாவெனத் துணிந்து உபாஸிப்பர். இவ்வாறே பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்னும் ஐம்பெரும் பூதங் களையும் அவ்வைம் பெரும் பூதங்களின் தொகுதியாக விளங்கும் இப்பிரபஞ்சத் தினையும் பரமான்மாவின் சரீரங் களாகத்துணிந்து அம்முறை யாலவற்றை வழிபடும் ஆ நன்மக்கள் உபாசனா மார்க்கத்தினியல்பு உணராது, அவற்றையே பரமான்மாவென உபாஸிக்கும் அநாரியச மாயிகளோடுங் கூட்டி ஆரியநன் மக்களையிகழ்வார் உண்மை யறியாதவ ராவரென் றொழிக. இது பற்றியன்றே ஆங்கில நாட்டிற் பிரபல பண்டிதரா யிருந்த 2மாகீஸ்மூலர் ‘ஜர்மானிய தொழிற் சாலைச் சிதர் துண்டுகள்' முதற்புத்தக முகவுரையில் பரதகண்டத்தில் தழுவப்படும் விக்கிரகாரா தனையும் வேறே, ரோம் முதலிய தேசங்களில் தழுவப் படும் விக்கிரகாராத னையும் வேறே, முன்னையதிற் பரமான் மாவின் சரீரங் களாக விக்கிரகங்கள் வணங்கப் படுகின்றன, பின்னையதில் விக்கிரகங் களே அவ்வாறு வணங்கப்படுகின்றன; ங்ஙன மாயின் இந்துமக்களை நாங்குறை கூறுதலென்னை' என்னும் பொருள் தருமாறு எழுது வாராயினர். இன்னும், அவர் கடைசியாக வெளியிட்டதமது ‘இந்தியர் ஆறு தத்துவ சாத்திரங்கள்’3 என்னும் புத்தகத்தில் தீவ்யதாஸ்தத்தர் என்பவர் எழுதிய

66

ஒன்றை அறிவதற்குச் சொற்களும் பொருள்களும் அடையாளங்களாக இடப்படுகின்றன; சொல் அடை யாளங்கள் செவியுணர்வுக்குக் கருவியாகின்றன; பொருள்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/38&oldid=1574454" இலிருந்து மீள்விக்கப்பட்டது