உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

14

மறைமலையம் லயம் – 8

கண்ணறிவிற்குக் கருவியாகின்றன. இவையே இவையிரண் டற்கும் வேற்றுமை. சொல் அடையாளங் களாகிய பாஷையை உபயோகிப்பதற்கு எந்தச் சமய வாதியும் ஆசங்கிக்க இடந்தராதபோது, இறைவனை வழிபடுதற்குக் கருவியாகிய பொருளடையாளங்களை ஆசங்கித்தல் என்னை?” என்னும் விஷயத்தை எடுத்துக்காட்டித் தம் துணிபு நிலையிட்டனர். வ்வாறு உண்மையாகச் சோதனை செய்ய வல்லார்க்கு ஆரிய நன்மக்கள் பண்டைக் காலந்தொட்டு அனுசரித்தொழுகுஞ் சன்மார்க்க முறையாகிய சகளோ பாசனை அநாரியசமயிகள் கொண்டு போற்றும் விக்கிர காராதனை போல்வதன் றென்பதூஉம், அது பல வேறு வகைப்பட்டதத்துவ நுண் பொருட் பரப்பெல்லாந் தன்னகத் தடங்கக்கொண்டு ஈசுரனை எளிதிலு ணர்ந்து வழிபட்டு ஆன்மாக்கள் முத்தியின்பம் பெறுதற்கு ஏதுவாகிய உபாசனா நிலையமாமென்பதூஉம் இனிது விளங்கும்.

இனி மேலே காட்டியவாதத்தில் அநாரிய கண்டங்களில் அபரஞான சித்தி பெற்றுத்தோன்றிய தீர்க்கதரிசிகளுக்கு முழுமுதற்பெருங்கடவுள் உருவமாகத்தோன்றி அனுக்கிரகஞ் செய்யவில்லை என்றும், ஆரியகண்டங்களிலுள்ள திருத் தொண்டர்களுக்குச் சகள அருட்கோலங்கொண்டு எழுந்தருளி வந்து அனுக்கிரகஞ் செய்தாரென்றுஞ்சொல்லிய விஷயத்திற் சந்தேகம் நிகழாமைப்பொருட்டு அதனை யீண்டெடுத்து விளக்கி ஒரு சிறிது வலியுறுப்பாம்.

இனி, இறைவன் சகளவருட்கோலங்ககொண்டு தமக்கு அனுக்கிரகஞ் செய்த முறைமையினையும், அங்ஙனம் அனுக்கிரகஞ்செய்யும் வழி இறைவன் கொண்ட திருவுருவ அடையாளங்களையுங் கண்டு அறிந்து அன்புவெள்ளம் தம்மிதயம் நிறைந்து துளிம்பு வழியப் பாட்டுக்களி லமைத்து வழிபட்ட திருத்தொண்டர் சரிதங்களை ஆங்கிலமொழியிற் பற்பல தேச சரிதங்களையும் ஒத்து நோக்கிப் படிக்கும் பிரபல பண்டிதர்களும் பிறரும் உண்மையாமெனத் துணிந்து தழுவி யொழுகுகின்றனர். இறைவன்றமக்குச்செய்த அனுக்கிரக முறையைத் தாமே தம் பாட்டுக்களில் வேறுகாரணமின்றி அவ்விறைவனை வழிபடுதல் காரணமாகவே அமைத்துப் பாடுதலா லங்ஙனம் அவர் சொல்லுந் தம்முடைய சரிதங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/39&oldid=1574455" இலிருந்து மீள்விக்கப்பட்டது