உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

15

அப்பிரபல தத்துவசாத்திர பண்டிதர் உண்மையாமெனக் கொண்டு ஒழுகக் கடமைப்பட்டவராயினர்.

இனி, அவருள் ஒரு சாரார் இங்ஙனம் மெய்யன் புடையதிருத்தொண்டர் தாமே கண்டு கூறும் இறைவன் அனுக்கிரக முறையைப் பொய்யென்று ஒழித்துவிடுதற்குக் கூடாமையால், அவ்வடியவர் கண்ட அவையெல்லாம் 4உருவெளித்தோற்றங்களேயன்றிக் கடவுள் தாமே எழுந்தருளி வந்து அவர்க்கு அருள்செய்தனவாகாவென்று உணர்த்துப் பிரதிவாதந் தொடுக்கின்றனர். அவர் சொல்லும் அவ்வுரு வெளித் தோற்ற வியல்பை ஓர் உதாரணத்தின்கண் வைத்து விளக்கிக் காட்டுவாம். இராமனுடைய உருவ வழகைக்கண்டு விரும்பி அதனால் தண்டிக்கப்பட்டுத் திரும்பிப்போகிய சூர்ப்பனகை தன் மூத்தோனாகிய இராவணனைக்கண்டு அவனுக்குச் சீதையின் பேரெழிலைவருணித்து உரைப்ப, அதனைக்கேட்டு மோகாக் கிரந்தனாகிய அவ்விராவணனுக் குச் சந்திரனைப்போற் றெளிந்து விளங்கு சீதையின் முகமும், அம்முகத்திற் குழைச் செவியளவுங் கிழித்துச்செல்லும் கரிய பெரிய வரிகடை யொழுகு விழிகளும், முல்லை முகைபோற் குமிழ்த்த மூக்கும், பவளத்தை அறுத்துக்கடைந்து திரட்டி வைத்தாற் போலும் செவ்வாயும், அவ்வாயினகத்தே முத்து வரிசைபோல் திகழும் பற்களும், பளிங்கு போல் தெளி வாகியகன்னங்களும், கரிந்து சுரிந்து நீண்டுகிடக்கும் மயிர்க் கற்றையும், பிற அங்கங்களும் தன்விழியெதிரே தோன்றக்கண்டு பரவசமுடையனாகித் தன்னருகே நின்ற தங்கையை அழைத்து இதோ தோன்றும் இவள்தானோ சீதை என்பாள்” என்று வினாயினானென்றும், அதற்கு அவள், தான் இராமன்மேற் சுழிபெருங்காதல் கொண்டிருந்தமையால் தன்னெதிரே தோன்றிய அவ்விராமன் உருவெளித்தோற்றத்தைச் ‘செந் தாமரைக்கண்களும் செங்கனிவாயும் பரந்து திணிந்த மார்பும் முழங்கால் தடவுந் இவ்விராமனென்பானென்று மறுமொழி தந்தாளென்றும் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட உருவெளித் தோற்றங் கள் அவ்வவர் காதன் மிகுதியால் தோன்றியன வாகை யால் அவை உண்மையாகவே வெளிப்பட்ட சகளகோலங் களாகமாட்டா; இதபோல, முழுமுதற்பெருங்கடவுளிடத்திற் றமக்கு நிரம்பிய அன்பின் பெருக்கால் அவ்வடியவர் தாம்

தடங்கைகளும் உடைய

வனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/40&oldid=1574456" இலிருந்து மீள்விக்கப்பட்டது