உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

  • மறைமலையம் லயம் – 8

உண்மையா

கண்ட உருவெளித் தோற்றங் களை உண்மையா மெனக் கொண்டு தஞ்செய்யுட்களில் அமைத்துப் பாடினாராகலான், அவர் கண்ட அத்தோற்றங்கள் இறைவன் கொண்ட சகள அருட்கோலத் திருவுருவங்களா மென்று துணிந்துரைத்தல் யாங்ஙனமென்றால்; கண்ணுக்கு மாத்திரமேதோன்றி வேறு இந்திரியங்களுக்குப் புலனாகாத தோற்றங்களாயின் அவை அவர் கூறியவாறு பொய்யாயொழிந் திடும். அவ்வாறன்றிக் கண்ணினாற் காணப்படும் உருவமும், செவியினாற் கேட்கப் படும் ஓசையும், மூக்கினாற் கவரப்படுந் திவ்விய மணமும், கையினாற் பற்றப்படும் வடிவமும்கொண்டு பொருள் விளங்கச் சொற்சொல்லுதலும் நகுதலும் இயங்குதலுமுடைய தோற்றங் களாயின், அவையெல்லாம் அவர் கூறியவாறு உருவெளித் தோற்றங்களாமென்பதற்கு ஒருவாற்றானும் ஏலாவாய், இறைவன் அவ்வன்பர்க்கு அனுக்கிரகஞ் செய்தற்பொருட்டுக் கொண்ட ஞான சொரூப அருட்கோலங்களேயாமென்பது னிது துணியப்படும். அப்படியன்று, அவ்வடியவர் தமக் குள்ள அளவிறந்த அன்பின் மிகுதியால் தம்மெதிரே தோன்றும் அவ்வுருவெளித் தோற்றங்களை நிற்பன போலவும் நடப்பனபோலவும் பேசுவனபோலவுஞ் சிரிப்பனபோலவும் பிற செய்வன போலவுமெல்லாங் காண்பா ராயினரெனின்; அது கிடக்க. இங்ஙனம் வாதம் நிகழ்த்தும் நீவிரும் நிற்பீர் போலவும் நடப்பீர்போலவுஞ் சிரிப்பீர் போலவும் உண்பீர் போலவும் டுப்பீர்போலவுந் தோன்று கின்றமையின், நீவிரும் அங்ஙனம் பொய்யா யொழிந்திடுவீர் போலுமெனக் கடாவு வார்க்கு மறுமொழி கூறலாகாமையான் அவ்வாறு உலக வியற்கை யொடு மாறுபட்டு வினாதல் போலியா மென்றொழிக.

இனி, இங்ஙனம் காட்டிய தருக்கப்பிரமாணங்களால் தமக்கெதிரே தோன்றும் உருவம் பஞ்சேந்திரியங்களானும் உணரப்படும் பெற்றியுடையதாயின் அஃது உருவெளித் தோற்றமாவதன்றி, மெய்ம்மை வடிவுடைய தேவவடிவ மாமென்பது நன்றுவலியுறுக்கப்பட்டதாயினும், பரகண்டத்தி லுள்ள திருத்தொண்டர்க்கு வெளிப்பட்ட அக்கோலங்கள் அங்ஙனம் ஐம்பொறியானும் உணரப்படுங்கருணைக் கோலங் களாமென்பது அவ்வடியவர் திருவாக்கினின்றே எடுத்துக் காட்டி நுமது மேற்கோளைத் தாபித்துக் கொள்க என்பார் திருப்தியுறுதல்வேண்டி அதுவுந் தந்து விளக்குவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/41&oldid=1574457" இலிருந்து மீள்விக்கப்பட்டது