உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

17

"5

மதுரைமாநகரிற் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி அவைக் களத்தில் தெய்வப்புலவராய் அமர்ந்திருந்த ஆசிரியர். நக்கீரனார், சோமசுந்தரக்கடவுள் எழுதிய “கொங்கு தேர்வாழ்க்கை” என்னுஞ் செய்யுட்குக் குற்றஞ்சொல்ல, அக்குற்றத்தைப் பரிகரித்துக்கொள்ளும் பொருட்டும் அச் செய்யுளின் மெய்ம்மைப்பொருள் அவர்க்கு அறிவுறுத்தும் பொருட்டும் ஈசுரன் சகள அருட்கோலந் தழுவி வந்து அவர்க்கு அதனை உணர்த்தியும், அவரதனை உணராமல் தாஞ்சொல்லிய குற்றத்தைச் சாதிக்கப்புகுந்தவழி, இறைவன் அவரது அகங்காரத்தைக் கெடுத்து அவரைப் பரிசுத்தஞ் செய்து அனுக்கிரகிக்க எழுந்த கருணையால் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து விழிப்ப, அதனினின்றுங் கிளம்பித் தம்மைச் சுடும் அக்நிச் சுவாலையைப் பொறுக்கமாட்டாமல், மானிடவுருவங் கொண்டு வந்த அவ்வீசுரனை அறிந்து தம்பிழையைப் பொறுக்கும்படி நக்கீரனார் அவ்விறைவனைக் குறையிரந் தியற்றிய திருவெழு கூற்றிருக்கை என்னுஞ் செய்யுளில்,

“சிறியோன் சொன்னவறிவில்வாசகம் வறிதெனக் கொள்ளாயாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றை யொடுவெண்ணிலவணிந்து கீதம் பாடியவண்ணல்

66

பாதஞ்சென்னியுட்பரவுவன் பணிந்தே”

எனவும், அத் ‘திருவெழுகூற்றிருக்கை' இறுதி வெண்பாவில், "ஆலவாயிலமர்ந்தாய் - தணிந்தேன்மேன், மெய்யெரிவு தீரப்பணிந்தருளுவேதியனே

யையுறவொன்றின்றியமர்ந்து”

எனவும், பெருந்தேவபாணியில்,

“பத்தியு நீயே முத்தியுநீயே

சொலற்கருந்தன்மைத்தொல்லோய் நீயேயதனாற்

கூடலாலவாய்க்குழகனாவது

அறியாதருந்தமிழ்பழித்தனனடியே

னீண்டியசிறப்பினிணையடிக்கீழ்நின்று

வேண்டுமதுவினிவேண்டுவன்விரைந்தே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/42&oldid=1574458" இலிருந்து மீள்விக்கப்பட்டது