உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

  • மறைமலையம் - 8

எனவும், அதன் இறுதியிலுள்ள வெண்பாவில்,

66

"விரைந்தேன்மற்றெம் பெருமான் வேண்டியதுவேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேனடியேன் - விரைந்தேன்மேற் சீற்றத்தைத் தீர்த்தருளுந்தேவாதிதேவனேயாற்றவுநீ

செய்யுமருள்”

எனவுந் தாமே தமக்கு உண்மையறிவிக்கும் பொருட்டு ஈசரன் கருணைத்திருக்கோலங்கொண்டு வந்தானென்பதூஉம், அதன்மேல் இறைவன் விழித்த நெற்றிக்கண் நெருப்புத் தம்மைச் சுடவே அவ்விறைவனைத்தாமறிந்து கொண்டா ரென்பதூஉம் நன்றாக எடுத்து மொழிந்திட்டன். இங்ஙனம் எடுத்து மொழிந்ததூஉம் பிறரை வஞ்சித்தன்முதலிய காரணம் மட்டு மின்றி இறைவனை என்பெல்லாம் நெக்கு நெக்குருகி நெஞ்சம் நெகிழ்ந்து கரைய வழிபட்டு அவன் அனுக்கிரகத்தைப் பெற்றுக் காள்ளும் பொருட்டேயாமென்பது சாதாரண அறிவுடை யார்க்கும் இனிது விளங்கும். இங்ஙனம் இறைவன் சகளவருட் கோலந்தழீஇ வந்து நக்கீரனார்க்கு அனுக்கிரகஞ் செய்த பேரற் புதமுறையை எந்த ஆங்கில நன்மக்கள் தாம் உருவெளித் தோற்றமென்றுரைக்க ஒருப்படுவார்? அல்லது, அவ்வாங்கில மொழியில் மனோதத்துவ நூற்பயிற்சி கைவந்த எந்தத் தத்துவசாத்திர பண்டிதர்தா மிதனை மறுக்க முந்திடுவார்? அல்லது, எந்த நிரீசுரவாத விற்பன்னர் தாம் இதனை மறுக்க வல்லராவர்? அப்படி அவர் பொய்யென்று மறுக்க விரும்பினா லிவற்றிற் கெல்லாம் வேறு என்ன கதிதான் சொல்லமாட்டுவார்?

இன்னும் ஒன்று காட்டுவாம். உலகமெல்லாம் புகழ்ந் தேத்துஞ்சைவத்திருவாளராகிய ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் தாம் அமைச்சராயிருந்துழிப் பாண்டியன்றந்த பொருள்கைக் கொண்டு குதிரைகொள்ளும் பொருட்டுப் போம்வழியிற் கிட்டிய திருப்பெருந்துறைப்பூங்காவிற் சிவபெருமான் ஒரு வேதியர் வடிவங்கொண்டு பல சீடர் புடைசூழவிருந்து தம்மை ஆண்டுகொண்டு அனுக்கிரகஞ் செய்த முறையைத் திருவண்டப் பகுதியில்,

“என்னேரனை யோர்கேட்கவந்தியம்பி யறைகூவியாட் கொண்டருளி

மறையோர்கோலங்காட்டியருளலும்”

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/43&oldid=1574459" இலிருந்து மீள்விக்கப்பட்டது