உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

393

பிறந்து, மயிற்றோகைக்கண் போலும் அழகிய புள்ளி செறிந்த சீலையையுணர்த்தும்; சித்திரப்படாத்தை யுணர்த்தும் புத்தகம் என்பது புட்டகம் என்பதன் திரிபு. இனிப்புத்தகம் எழுதிய புத்தகத்துக்குமாம்; இதன்முதற்சொல் இறகினையுணர்த்தும் புள் ஆ கலின், இறகினால் எழுதப்பட்டது என்பது பொருள். அற்றேல் அக்காலத்தில் காகிதம் உண்டோ எனில் போகர் ஏழாயிரத்தில் காகிதயந்திர முதலியன கூறலின் அக்காலத்தும் காகிதமுண்டெனத் தெளிக. செந்தமிழ் தன் சீர்குலைந்த காலத்தில் எழுதியதாகலின் சித்தர் நூல்களை யிகழற்க. அக்காலகதியாம். புத்தகம் மயிலிறகையு முணர்த்தும்.

“எட்டுத்திப்பிலி யீரைஞ்சு சீரகம்

கட்டுணுந்தேனிற் கலந்துகொண் டுண்ணவே விட்டுப்போகும் விக்கலும் விடாதேற்

சுட்டுப்போகு புத்தகந் தன்னையே'

وو

இதனால் அச்சொற்கு அப்பொருளுண்மை அறிக. விக்கலும் வாந்தியும் நிற்க மருந்து கூறப்பட்ட இடமாகலின் ஈண்டுப் புத்தகம் என்பதற்கு மயிலிறகு என்பதே பொருள்.

சுபம்

இ து து நன்மையை யுணர்த்தும், இதன்முதற்சொல் பொன்மைப்பொருளிலும் வரும் சும் என்பதாகலின் ‘அது' சுபம் எனவாம். மங்களமென்பது பொன்மையெனவே மஞ்சளைக் கொள்க.

"சொம்பொனார்தரு மெழில்திகழ்” எனும் சம்பந்தர் தேவாரத்தாலும் அச்சொலுண்மை பெற்றாம். செம்பொன் - செம்பொன். சும்சுகம் சுபம், சும் சொம் சொத்து.

அதிகற்றாதி

ஃது சித்திரமூலத்தை யுணர்த்தும்; அதிகல் + தாதி இரண்டுபதம்; அதிகல் என்பது அத்து என்னும் சொல்லிற் பிறந்தது. தாதி யென்பது தாது என்னும் சொல்லிற்பிறந்தது. அவ்விரண்டற்கும் சிவப்பென்பது பொருள். சித்திரமூலம் சிவப்பாகலின் அப்பெயர்த்து; ஈண்டுச்சிவப்புச் சித்திரமூல மெனக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/418&oldid=1574844" இலிருந்து மீள்விக்கப்பட்டது