உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

மறைமலையம் - 8 அதிகும்பை

இது கையாந்தகரையை உணர்த்தும்; கும்பை என்பது கும்பியென்னும் சொல்லிற்பிறந்தது, கும்பி என்பது நீர், அதி உபசர்க்கம். நீர்ச்சார்பிலுள்ளது என்பது அதன் பொருள். கும்பியென்பது சேற்றையும் குறிக்கும். நீரொடுகலந்தது என்பது அதன் பொருள்.

அதிசாரணம்

இது மாவிலிங்கையை யுணர்த்தும், சாரணம் என்பது தாளம் என்னும் சொல்லிற்பிறந்தது. அது, தாலம் தாரம் தாரணமம் சாரணம் எனவாம். அதி உபசர்க்கம். அம்மரப் பட்டை சிவப்பாகலின் அப்பெயர்த்து தாளமென்பது மஞ்சணிறத்தையும் குறிக்கும், தாளம் = தாளகம், தாளகம், தாரம் இங்குலிகமுமாம். தாரம் = சிற்றரத்தை, இது சிவப்பு நிறம் தாலம் ஆவிரை.

அதிட்டச்செல்வி

இது இந்திரபாஷாணத்தை யுணர்த்தும், இந்திரன் அதிட்டச்செல்வன் ஆகலின் அம்பொருட்குறிப்புடைத்து.

அதிதல்

து சிலேட்டுமத்தை யுணர்த்து த்வயாதிகம் என்பதனிறுதியிலுள்ள அதிகம் என்பதன் சிதைவு. வாத பித்த சிலேட்டுமம் என்பவற்றுள் இரண்டாவதாகிய பித்தத்துக்கு மேற்பட்டதென்பது பொருள். த்வயாதிகமெனினும் சிலேட்டும் மெனினும் ஒக்கும். சில் என்பது இருமையை யுணர்த்துமாகலின் சிலேட்டுமம் என்பதற்கு மப்பொருளே, சிலேட்டுமம் சிலேத்துமம் சேத்துமம் என ஆயிற்று.

சிலேடை, ஔபச்சிலேடம் சிலுபம் சவலைவெண்பா சவலைப்பிள்ளை முதலியவற்றுக்கும் அச்சில் என்பதே முதற்சொல்லாம்.

சிலேடையெனினும் இரட்டுறமொழித லெனினும் ள்பசிலேட மெனினும் ஓரிடநிற்றலெனினும்; சிலுமம் எனினும் சிலுபா எனினும்; சவலைவெண்பாவெனினும்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/419&oldid=1574845" இலிருந்து மீள்விக்கப்பட்டது