உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

மறைமலையம் - 8

– 8 என்பன பிறக்கும். வங்கம் - சிவப்பு செம்பு ஈயம் வெள்ளி; வங்கம் - செம்பு, நாவாய்; வங்கம் - ஈயம், கத்தரிக்காய்; இம்முறைமையிற் பொருட்பேறாம். நாவாயினடியில் செப்புத் தகடும் கத்தரிக்கா யிலீயமு முண்மையின் அப்பெயரவாம். வங்கக்காய் என்பதனை வங்காயலு என்பர் தெலுங்கர். வங்கச்சொல் பொன்மையு முணர்த்துமாகலின் அங்கம் கொன்றைக்காயிற்று. அதன்பூ பொன்னிறம், செம்பின் மேலீயம் பூசுவதனா லப்பெயர்த்து.

இங்ஙனம்,

மாகறல் - கார்த்திகேயமுதலியார்

மெய்ந்நல விளக்கம்

அகவாயுவும் புறவாயுவும் ஒரேவெப்பம் கொண்டாலும், வாயு அசைவற்றிருந்தாலும், புதிய குளிர்ந்தவாயு நம்மில்லத் தினுட் புகவும் அசுத்தம்பெற்ற அகவாயு வெளிப்போகவுங் கூடிய தன்மையில்லையாகின்ற தென்பதை மேற்கூறியவாற்றால் அறிந்தோம். அவ்வாறாயின் நமக்கொரு வகையான இறுக்கமும் புழுக்கமும் சுகவீனமுமுண்டாவதியற்கை. உடம்பெங்கும் வியர்வை துளிக்கின்றது. ஆகையால் இவ்வமயத்து நாம் நம் முயற்சியாலே வாயுவினியக்கம் நடைபெறச்செய்தலவசியம். அஃதெங்ஙனமெனின் கூறுதும்.

அடுப்பில் நெருப்பெரியும்போது அப்பாகமெங்கும் வெப்பமடைகின்றது; வெப்பமடையவே சுற்றுப்பக்கங் களிலுள்ள வாயுவும் வெப்பம்பெற்று இலேசாகிமேலே செல்லுகின்றது. எவ்வளவு விரைவாய் இவ்வாயுமேலே சென்று வெளிப்படுகின்றதோ அவ்வளவு விரைவோடு புறவாயு உட்புகுமென்பது மேலேகாட்டிய நியதியாலறியலாம். இம்மூலத்தத்துவத்தைமேற்கொண்டு அநேக பெரிய கட்டிடங் களில் வாயுவினியக்கத்தை நடத்திவருகின்றார்கள். சுரங்கங் களில் வேலைசெய்கிறவர்களுக்கும் இவ்வாறே சுத்தவாயுவை உட்புகுத்துகின்றார்கள். பெரியகட்டிடங்களினுள்ளே மேல் தளத்துக்கருகில் கொதிக்குநீர்நிறைந்தகுழாய்களேனும் அல்லது நெருப்புத்தணல் கணிரம்பிய யந்திரங்களேனு ம் அமைக்கப் பட்டால், மேற்பாகமுள்ள வாயு சூடுகொண்டு தளத்தின்கண் அமைக்கப்பட்ட துவாரங்களின் வழியாய் மேலேசென்று வெளிப்பட கட்டிடங்களின் மற்றப்பாகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/423&oldid=1574849" இலிருந்து மீள்விக்கப்பட்டது