உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

மறைமலையம் -8 8

அல்லதூஉம், துரியாதீதனாகிய விறைவனுக் கோரெல்லை கூறின் அது அவ்விறைமைக்குணத்திற்கு வழுவாம்போல, சில வாழ்நாட்பலபிணிச்சிற்றறிவேம், ஒன்றேயூரு மொற்றியூரிறை வன்றிருவருள் காரணமாகத் தாங்களியற்றிய நூல்களின் மாட்சிக்கோர் புகழ்மொழி கூறுதலும் அவைகட்கோர் மாசாமென விடுத்தாம்.

இனி, தாபதநிலையைப்பற்றித் தாங்களுரைத்தவைகளை, மறுப்பார் கூற்று இப்பொய்யுலகவாழ்க்கையுட் பிணிப்புண்டு அதன்கட் பொய்பல நினைந்து பொய்பல பேசி பொய்பல செய்து, பொய்யினும் பொய்யாகிய விப்பொய்யுடலை மெய்யென நினைத்துழலும் பபுட்சுக்களவைக்கணன்றி, வீடு காதலித்துக் கோகனதன் முதற்குலவு பதமெல்லாம் வெறுத்து நெறியறுவகையும் மேலொடு கீழடங்கவெறும் பொய்யென நினைந்திருந்து, மேலொடு கீழில்லான், நிறுத்துவதோர் குணமில்லான்றன்னையொருவருக்கும் நினைப்பரியான் ஒன்று மில்லான் நேர்பட வந்துள்ளே பொறுப்பரிய பேரன்பையருளி யதன்வழியே எங்குமில்லாப் போகத்தைப்புரிந்து புகுந்திடுமாறு பெற்ற அம்முமுட்சுக்களவைக்கட்பயன்படுமாறு ஒரு சிறிது

மில்லையென்க.

கையறு நிலையைப்பற்றியும் தாங்கள் நிராகரித்தது

மிகவும் வியக்கற்பாலதே.

இவ்விந்துகுமாரசபைப்பிரசாரகரு ளாருவரும் தணிகைப்புராண வுரையாசிரியர் ஸ்ரீலஸ்ரீ, அம்பிகைபாக உபாத்தியாயர் குமாரருமாகிய பண்டிதர் ஸ்ரீமத் சபாபதிப் பிள்ளை அவர்கள் தங்கள் நூல்களின் இலக்கணமாட்சியைப் பார்த்தபோது, அகத்தியர் வரத்தாற்செகத்திலுற்பவித்து அவரொரு கடலையுண்டால் யாமிருகடலை யுண்பாமென்று வடமொழி தென்மொழிக்கடலை யுண்டுகுசை நுனியதனினும் கூர்மதி பெறீஇயமாதவச் சிவஞானயோகீஸ்வரர்தானோ,

இந்நூலாசிரியரென்று வியந்தார்கள்.

இங்ஙனம்,

இந்துகுமார சபையார்.

அ.க. வயித்தியலிங்க உபாத்தியாயர்

மானேஜர்

அ.மா.தியாகராஜ பிள்ளை

இ.கு. சபை. உபகாரியதரிசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/425&oldid=1574851" இலிருந்து மீள்விக்கப்பட்டது