உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401

27. அறிக்கை

‘பூலோக நண்பன்' பத்திரிகையிலே ம--ள--ள--ஸ்ரீ, நா. கதிரைவேற் பிள்ளை யென்பவர் நியாய விசாரணை செய்யும் ஆற்றலும் அறிவுமின்றிப் பொறாமையாற் பெரியதோர் தலை தடுமாற்றங்கொண்டு எம்மையும் எமது பத்திரிகையினையுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் புறம்பழித் தெழுதினா ரென்று சிலர் சொல்லக் கேட்டேம். அக்கேட்ட பொருளைப் பொருட்படுத்தாது யாம் நூலாராய்ச்சியிற் றோய்ந்து ஆண் டழும் இன்பநுகர்ச்சியின்கண்ணே உவகைதுளும்பு நாட் களில், ஒருநாள் ஒருவர் அப் பூலோக நண்பன் பத்திரிகையின் 9-ஆவதிலக்கப்பத்திரிகையினை எடுத்துவந்து அதிலவரெம்மைச் சுட்டி எழுதிய பகுதியினைப் படித்துக் காட்டினார். அதனை முழுவதுங் கேட்டபின் ஷ கதிரைவேற்பிள்ளை மாட்டு எமக்குப் பரிதாபம் நிகழ்வதாயிற்று. என்னை? எம்மிடத்து மிக்கதோர் பொறாமையும், பகைமையுங் கொண்டு உண்மை காண மாட்டாமல் ஏதேதோ வெழுதி அப்பத்திரிகைக்குந் தமக்கும் இழுக்கந்தேடினாராகலின், தொன்னூலாசிரியர் நுண்ணிய கருத்தும் தமிழிலக்கண இலக்கியமரபும் நன்காய்ந்தெழுதும் மதுகையின்றி ஷ பிள்ளை நமது காஞ்சியின்மேல் மருண்டுரைகள் மயக்கவுரைகளின் பெற்றி தேற்றித் தொல்லாசிரியர் கருத்துணர்த்து முகத்தால் நியாய சாரணை செய்து வெளியிட்ட சோமசுந்தரக்காஞ்சி யாக்கத்தி லுள்ள பொருள்களைக் கூறு கூறாகப் பிரித்துக் கொண்டு தருக்கித்து மறுக்க மாட்டாமல், அவதூறு தூஷணைசெய்யத் தலைப்பட்டதனால் அவர்க்கு வந்த பயன் யாது? எடுத்திதனை நெகிழலிட்டு இங்ஙனந் தூஷணைசெய்தல் ஒரு தோல்வித்தான மென்பதனை அவரறியார்போலும்? யாம் ‘மூக்குக்கண்ணாடி யிட்டுச்' செல்கின்றேம், 'உள்ளங்கி நிலையங்கியிட்டு' உலாவுகின்றேம். 'தொடுதோன்மாட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/426&oldid=1574852" இலிருந்து மீள்விக்கப்பட்டது