உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

மறைமலையம் -8 8

தலைநிமிர்த்துச்' 'செல்கின்றேம்', என்று அவரெம்மைப் புறம்பழித்தால் இலக்கண இலக்கிய வாதத்தில் ‘வரெம்மை வென்றராவரோ? இங்ஙனஞ் சொற்பிரயோகஞ் செய்தால் நமக்கு வெற்றி யுண்டாமென்று அகங்கரிக்கும் வெறும் புல்லறிவினாரைத் தெருட்டுதல் எம்போல்வார்க்கு இயைவ தன்று. இன்னோர்க்குக் கௌரவ அரசாங்கத்தார் அறிவு காளுத்துவர். இவர் இங்ஙனமே எடுத்த வாதத்தினை விடுத்து எம்மைப் புறம்பழித் தெழுதுவாராயின் இனியாம் இவர்க்கு அரசாங்கத்தாரால் அறிவுதெருட்டுங் கடப்பாடுடையோ மென்பதனை அறியக்கடவர். இது நிற்க.

இனி, இவரிவ்வாறின்றி நம்மோடு தருக்கித் துண்மைப் பொருளறிதல் வேண்டினாராயின் ‘எடுத்தபொருள் பிறழாது தருக்கிப்பாராக.' இவர் பத்திரிகை வாயிலாகத் தருக்கிக்க வேண்டினும், புலவர் சபைகூட்டித் தருக்கிக்கவேண்டினும் யாம் அவற்றிற்கெல்லாம் சித்தமாயிருக்கின்றோம். சபை கூட்டித் தருக்கித்தலென்றவுடனே இவர் தமக்கு இச்சகம்பேசுந்

தம்மையொத்த சாமானியரைச் சேர்த்துவைத்துக்கொண்டு கதுமென எம்மை வாதிட அழைத்தலும், அதற்கிணங்கி வாராவிடிற் பகடிபண்ணுதலுஞ் செய்வர்; அங்ஙனஞ் செய்த லவரியற்கை. ஆகையால், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான தொல்லிலக்கண இலக்கிய நூலுரை களில் வல்லராய் யாழ்ப்பாணத்தும், தென்னாட்டும் விளங்கும் வித்துவசிகாமணிகளை ஒருங்கு கூட்டி அவர் முன்னிலையில் வாதநிகழ்த்துதலே முறையாமாதலின் அவர் அவ்வாறு செய்கவென்று வன்று அதனை வற்புறுத்தவே இஃதீண்டெழு தினாமென்க. இன்னோரன்ன இலக்கண இலக்கிய வாதங்களைச் சீர்தூக்கி யளந்துபார்த்து முடிவுரை கூறவல்லார் பிரபல வித்துவசிகாமணிகளேயாவர். இது நிற்க.

இனி, யாழ்ப்பாணத்தும் பிறாண்டுமுள்ள வித்துவ சிகாமணிகள் பலர் நம்முடைய 'சோமசுந்தரக்காஞ்சியாக்கத்’ தினை ஆய்ந்துபார்த்து நடுநிலை திறம்பாது அதன்கட் சொல்லப்பட்ட வாதங்கள் நியாயமுடையனவேயாமென்று உறுதியுரைமொழிந்திட்டார்கள். அவர்களுறுதியுரைகள் சில இப்பத்திரிகையின் புறவிதழின்கட் புறவிதழின்கட் பிரசுரிக்கப்பட்டன. இவையெல்லாங் கண்டுவைத்தும் அறிவுதிருந்தாது குறும்பு செய்வாரென்கடவரென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/427&oldid=1574853" இலிருந்து மீள்விக்கப்பட்டது