உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

403

நூல்களைத் தழுவி

ஷை ஷ பிள்ளை நாம் ஆங்கில எழுதுதலைப்பற்றிப் பரிகாசஞ் செய்கின்றார். ஆங்கில வித்துவான்களின் நுண்ணிய அறிவும், பெருகிய அற்புத வாராய்ச்சியுங் கண்டறியும் பேறுபெறாதமற்றிவர் அவரையும் எம்மையுமிகழ்தல் முறையேயாம். கொடிமுந்திரி பழத்தை உண்ணுதற்கு எட்டி எட்டிப்பார்த்துங் கிட்டாமையா லதனை யிகழ்ந்துசெல்க. இவர் தமக்கு ஆங்கிலபாஷாப்பியாசங் கிட்டாமையால் ஆங்கில வித்துவசிகாமணிகளின் அருமை பெருமை யுணரப்பெறாது இகழ்ந்திட்டார். அவ்வாங்கில வித்துவ சிகாமணிகளின் நுட்பவறிவால் நம் இந்திய நாட்டிற்கு எய்திய அரும்பெறற் சௌகரியங்கள் பலவற்றையும் இவர் அனுபவித்துக் கொண்டே அவர்களைப் புறங்கூறுவது

66

பெரியதோர் அறியாமையும் நன்றிமறந்த குற்றமுமாம். யாம் ‘அன்னியநூலின் விதியவிரோதமேல், உன்னேல், பழுதென்று ளத்து” என்னும் ஆன்றோர்வாக்குண்மை கடைப்பிடித்து அரியபொருள்கூறும் நுண்ணறிவினார் யாரா யினும் அவரைத் தழுவிச் செல்லும் ஒழுகலாறுடையேம். “எப் பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள், மெய்ப் பொருள் காண்பதறிவு” என்பது திருவருட் கட்டளை யாதலி னென்க.

ஷபிள்ளை எழுதிய அவ்விஷயத்தின்மேன் மறுப்பொன் றெழுதும்படி பலர் எம்மை வேண்டியும் அது செய்தற் கமர்ந்திலம். என்னை? அதன்கணெடுத்து மறுக்கற் பாலதாம் நுண்பொருள் ஒன்றுதானுங் காணப்படாமையானும், வாக்கியங்கள் பல செவ்வனே முடிவுபெறாமல் நிற்றலல் லாமலும் வழுச்சொற்கள் பலப்பல காணக்கிடத்தலானும், அவற்றை யெடுத்துக் காட்டுதலாற் பெரும்பயமின்மையானு மென்பது அல்லதூஉம், எம்மாப்தரிரண்டொருவர் அவ் விஷயத் தினைக்

கண்டு சாமானியர் மயங்காமல் எம்மைப்பொருட்டு ஒரு மறுப்புச் சித்தஞ் செய்தலானும் யாமதன்கட்புகுந்திலம்.

“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறு மாக்கந் தரும்”

(குறள் 83)

பத்திராதிபர். நா.வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/428&oldid=1574854" இலிருந்து மீள்விக்கப்பட்டது