உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவும்,

ஞானசாகரம்

21

“பரவியவன்பரையென் புருக்கும் பரம்பாண்டியனார் புரவியின் மேல்வரப்புந்திகொளப்பட்ட பூங்கொடியார் மரவியன்மேல்கொண்டு தம்மையுந்தாமறியார்மறந்தே”

எனவும், பின்னர்ச்சுவாமிகளைப்பாண்டியன் வையை யாற்றில் நிறுத்தி நலிந்தவழியிறைவன் அவரை நலிவுதீர்த்தற் பொருட்டு விடுத்த வெள்ளப்பெருக்கினால் வையையாற்றின் கரையுடைந்து நீர்பெருகுதலை அரசனுணர்ந்து அக்கரையை ஊரிலுள்ளார் அனைவருங் கட்டும்பொருட்டு நிலனளந்து கொடுப்ப, அங்ஙனந்தங்கடங்ட்குப் பிரித்துக்கொடுக்கப்பட்ட நிலங்களிற் கரைகோலிக்கொண்டு ஊரிலுள்ளாரெல்லாரும் முயன்று கொண்டிருக்கையில், உறவினர்யாருமின்றித் தனியனாய்ப் பிட்டுவிற்கும் பொருளைக்கொண்டு தன் வயிறுநிரப்பி அந்நகரில் வசித்துக்கொண்டிருந்தவளும், ஆலவாய்க் கடவுளிடத்திற் பெருகிய மெய்ப்பத்தியுடையளும், முதிர்ந்த வயதினளுமாகிய ஒருபிட்டுவாணிச்சி தனக்கு அரசனளந் திட்ட கரைநிலத்தைத்தானே திருத்திக் கட்ட மாட்டாமையானும் தனக்காகக் கூலியின்றித் தொழில் செய்வாரைப் பெறாமை யானும் பெரிதும் வருந்தி ஆலவாய்க் கடவுளிடஞ்சென்று அழுதுகுறையிரப்ப, அவள் குறையினைச் செவிமடுத்த கருணா மூர்த்தியாகிய பெருமான் ஓர் ஒட்டனைப் போல் வடிவங் கொண்டுபோந்து 'அம்மே! கூலிக்கு ஆள் வேண்டுமோ?' என்ன, அவள் 'அப்பா! நான் கூலிகொடுக்கப் பொருள் சிறிதுமில்லாத வறுமையுடையேன்; நாடொறும் பிட்டுவிற்று அதில் வரும் அற்ப இலாபப் பொருளைக் கொண்டு வயிறுவளர்க்கின்றேன்; பாவியேன் என்செய்வேன்! என்ன, அவர் ‘அம்மே! நீ சுடும் பிட்டில் உதிர்ந்துபோகும் பாகங்களை யேனும் எனக்குக் கூலியாகக் கொடுக்க ஒருப்படுவையேல் உனக்காகத்தொழில் செய்வேன்' என்று ரைப்ப அம்முதியோள் பெரிதும் அகமகிழ்ந்து ‘அப்பனே! அவ்வாறே தருவேன், நீ தாழில்செய்துவா’என்ன, அவர் அவ்வாறே தொழில்

சய்வதுபோல் மாயஞ்செய்து இடை யிடையே ய யவளிடஞ் சென்று 'அம்மே! எனக்கு நிரம்பவும் பசிக்கின்றது. உதிர்ந்த பிட்டுணவுகொடு' என்று கேட்டுப் பெற்றுண்டு பிச்சனைப் போற் கூத்தாடிக்கொண்டு கரை கோலாது நாளைப்போக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/46&oldid=1574462" இலிருந்து மீள்விக்கப்பட்டது