உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 9

பொழுதறியும் வினையாளர் என்று நேரே பொருள்படும் ச்சொற்றொடரை ‘மாக்கள் பொழுதளந்தறியும் பொய்யாக் காண்கையர்' எனப் பிறழ்த்தியிதன் மேலும் ஈண்டைக்கோர் இயைபின்றியும் உரைத்தார். எறிநீர் வையகம் - வீசுகின்ற கடல் நீராற் சூழப்பட்ட நிலவுலகம். குறுநீர் - சிறிய நீர்; இது நாழிகை வட்டிலினுட் கசிந்த நீர். 'குறுநீர் - என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதினாருமுளர்; அப்பொருள் நச்சினார்க் கினியருரையிலாதல் மற்றை நூல்களிலாதல் பெறப்படாமையால் அதுபொருந்தாதென விடுக்க.கன்னல் - நாழிகைவட்டில்; இஃதிப் பொருட்டாதல் “கன்னுலுங் கிண்ணமும் நாழிகை வட்டில் என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க. “குறுநீர்க் கன்னலின், யாமங் கொள்பவர்” என்றார் மணிமேகலையிலும் (7, 64 - 65) ஒரு கடாரத்திலே நீரை நிரப்பி, அடியிற் சிறு தொளை யுள்ள ஒரு வட்டிலை இட்டாற் கடாரத்து நீர் அப்புழைவழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரினளவுக்குத் தக நாழிகை கணக்கிடுவர். பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது.

(59 - 66) உடையினையும் மெய்ப்பையினையுந் தோற்றத் தினையும் யாக்கையினையுமுடைய யவனர், புலிச்சங்கிலி விட்டுக் கைசெய்த இல்லில் அழகிய மணிவிளக்கினை ஒளிரவைத்து வலிய கயிற்றிற் கருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளொன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறையுட் புறவறையின்கண்ணே சட்டையிட்ட ஊமை மிலேச்சர் அருகே காவலிருப்பரென்க.

உடை

-

மத்திகை - சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகை வளைஇய குதிரைச்சம்மட்டி சூழப்பட்ட உடை; மறிந்து வீங்கு செறிவுஉடை - மடங்கிப் புடைக்க நெருங்குதலுறக் கட்டின உடை.மெய்ப்பை - சட்டை வெருவருந் தோற்றம் - காண்பதற்கு அச்சம் வருவதற்கேதுவான தோற்றம். வலி புணர்யாக்கை - வலிமைகூடிய உடம்பு. யவனர் - கிரேக்கர், சோனகர் (lonians). மணிவிளக்கம் - பளிங்கு விளக்கு; மணிபோறலிற் பளிங்கும் மணி எனப்பட்டது; “மணியிற் றிகழ்தரு” என்பதற்குப் பரிமேலழகி யாரும் ‘பளிங்கு மணி' என்று பொருளுரைத்தார், திருக்குறள் 1273. எழினி - திரை. 'உடம்பின் உரைக்கும் நாவினுரையா’ என மாறி உடம்பாற் குறிகாட்டித் தெரிவித்தலன்றி நாவால் உரைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/109&oldid=1578963" இலிருந்து மீள்விக்கப்பட்டது