உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

77

மாட்டாத என்க. மிலேச்சர் - ஆரியர், பெலுச்சிதானத்தினின்று வந்த துருக்கர்; 'பெலுச்சி' என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சிதானத்தின் வழியாகப் பரதநாட்டினுட் புகுந்தமை பற்றியே பண்டைக் காலத்தில் ஆரியர், தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர். திவாகரத்திலும் “மிலேச்சர் ஆரியர்” எனப் போந்தமை காண்க.

(67 - 79) பள்ளியறையின் அகத்தே சென்ற அரசன் நாளைக்குச் செய்யும் மிக்க போரினை விரும்புதலாலே உறக்கங் கொள்ளானாய், முன்னாட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப் பெட்டை யானைகளையும் மறந்த களிற்றியானைகளையும், யானைகளின் பரிய தும்பிக்கை அற்றுவிழத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றியினைச் செவ்விதாக்கிச் செஞ்சோற்றுக் கடன் தப்பாமற் கழித்து இறந்த மறவரையும் நினைந்துங், காவலாயிட்ட தோற்பரிசையினையும் அறுத்துக்கொண்டு அம்புகள் அழுந்தினமையாற் செவியைச் சாய்த்துக் கொண்டு தீனி எடாமல் வருந்துங் குதிரைகளை நினைந்தும் ஒரு கையினைப் படுக்கையின்மேல் வைத்து மற்றொரு கையால் முடியைத் தாங்கியும் நீளச் சிந்தித்து இரங்கி இங்ஙனமெல்லாம் அவ்விரவைக் கழித்துப் பின்னாளிற் பகைவரைக் குறித்துப் படைக்கலங்கள் எடுத்த தன் வலிய விரலாலே அவர் தம்மையெல்லாம் வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல்வெற்றியினை நிலை நிறுத்திப், பின்னாளில் தன் மனைவியைக் காணும் மகிழ்ச்சியாற் பாசறையில் இனிய துயில் கொள்கின்றான் என்க.

L

-

'மண்டு' என்பதனை அமர் என்பதனோடாதல் நசை யென்பதனோடாதல் கூட்டி மிக்குச் செல்லும் போர், மிக்குச் செல்லும் நசை என்க. பாம்பு பதைப்பு அன்ன - அடியுண்ட பாம்பின் துடிப்பை யொத்த; இது வெட்டுண்டு விழுந்து துடிக்கும் துடிப்பையொத்த; து யானைத் தும்பிக்கைக்கு உவமம். தேம்பாய் கண்ணி தேன் ஒழுகும் வஞ்சிமாலை. சோறு வாய்த்தல் - செஞ்சோற்றுக்கடன் தப்பாமற் கழித்தல்; இதனைச் “சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப” என்னும் புறப்பொருள் வெண்பா மாலை யுரையிலுங் காண்க.கடகம் - கங்கணம், தொடி, வளை; இவ் அணிகலன் ஆண் மக்களும் அணிதலுண்டென்பது ‘கண்ணெரிதவழ வண்கை மணிநகு கடகம் எற்றா' என்னுஞ் என்னுஞ் சீவக சிந்தாமணிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/110&oldid=1578964" இலிருந்து மீள்விக்கப்பட்டது