உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

-

மறைமலையம் - 9

செய்யுளிலுங் காண்க. கையைத் தலைக்கு அணையாக வைத்தலிற் கையில் அணிந்த கடகத்தை முடியிற் சேர்த்தி என்றார்.நகைதாழ் கண்ணி ஒளி தங்கு மாலை, என்றது தனக்குண்டாம் ஒளி தங்குதற்கு அடையாளமாய் இட்ட வஞ்சி மாலையை. அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை - பகையரசு இருந்து நடுங்குதற்குக் காரணமான வெற்றி முரசு முழங்கும் பாசறை என்க. பனிக்கும் - நடுங்கும்.

(80-103) பொழிப்புரை பொருட்பாகுபாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது, ஆண்டுக்காண்க.

66

-

-

-

-

நிறைதபு புலம்பு நிறை கெடுதற்கு ஏதுவான தனிமை. 'நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை" என்றார் கலியிலும். உறுமஞ்ஞை அம்பு தைத்த மயில், இது மயிலின் சாயலினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று. இடம் சிறந்து உயரிய இடம் அகன்று சிறந்து உயர்ந்த. பாவை- வெண்கலத்தாற் செய்த பிரதிமை; இதன் கையில் விளக்கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை கூடல்வாய்; கூரையின் இரு பகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டுவாய். ரு மாத்திரள் அருவி - வெரிது திரண்டு விழும் அருவிநீர். இன்பல் இமிழ் இசை இனியவாய்ப் பலவகையாய் ஒலிக்கின்ற ஓசை. ஓர்ப்பனள் கிடந்தோள் - செவியிற் கேட்பவளாய்க் கிடந்த தலைவியின். அம்செவி நிறைய ஆலின உட்செவி நிரம்ப ஒலித்தன. பிறர் வேண்டுபுலம் பகைவர் விரும்பிய நிலங்கள். வயிர் - ஊதுகொம்பு. வலன் நேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்கு ஒத்து ஒலிப்ப. அயிர - நுண்மணலிடத்த; மணன்மேல் வளர்தலின் அயிரகாயா' என்றார். அஞ்சனம் - மை; மைந்நிறமுடைய பூவுக்கு ஆகுபெயர். பொன் கால - பொன் நிறமான பூவைத் தர. முறிஇணர் - தளிருங் கொத்தும் தோடு ஆர் -இதழ் நிறைந்த; தொகுதி நிறைந்த என உரைப்பினுமாம். கானம் நந்திய செந்நிலப் பெருவழி - காடு செழித்த செவ்விய முல்லைநிலத்தின் வழியிலே. வானம் வாய்த்த - வேண்டும் பருவத்து மழை பெய்யப்பெற்ற. வாங்கு கதிர்வரகு - வளைந்த கதிரினையுடைய வரகு. திரிமருப்பு இரலை - முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க் கலைகள். எதிர்சொல் வெண்மழை பொழியுந் திங்கள் இனிமேற் பெய்தற்காகச் செல்லும் வெண்புயல் மழையைப் பொழிதற்குரிய கார்காலந் தொடங்கும் ஆவணித்திங்கள் முதலில்; இதற்கு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/111&oldid=1578965" இலிருந்து மீள்விக்கப்பட்டது