உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

-

79

நச்சினார்க்கினியர் முன் பனிக்காலம் என்று பொருள் கொண்டு இப்பாட்டின் பொருளுக்குச் சிறிதும் இணங்காவாறு உரை கூறினார். பிறக்கு பின். துனைபரி துரக்கும் - விரைந்து செல்லுங் குதிரையை மேலுந் தூண்டிச் செலுத்தும். வினை விளங்கு - போர்வினைக்கண் தமதுதிறம் மிக்கு விளங்கும், என்றது தலைமகனது தேரிற்பூட்டிய குதிரைகளை.

1.

2.

அடிக்குறிப்புகள்

திருச்சிற்றம்பலக் கோவையாரில், "ஆரம்பரந்து திரை பொரும்" என்னுஞ் செய்யுள்முதல் "முவறழீஇய அருண்முதலோன்” என்னுஞ் செய்யுள் ஈறாகத் தலைமகள் யாரும் இல் ஒரு சிறைத் தனியளாயிருந்து கடலை நோக்கியும் அன்னம் முதலியவற்றை நோக்கியும் வருந்திக் கூறிய பாட்டுப் பத்தும் இரங்கலே கூறுதலால் ‘திணைநெய்தல்' என்று பேராசிரியர் "முவறழீஇய என்னுஞ் செய்யுளுரையிற் கூறியதூஉம் உற்று நோக்கற்பாலது.

நீர்ப்படைக்காதை, 151 ஆம் அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/112&oldid=1578966" இலிருந்து மீள்விக்கப்பட்டது