உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

12. வினை முடிவு

எழிலி பெரும்பெயல் பொழிந்த மாலைக்காலத்திலே பெருமுது பெண்டிர், “யாம் ஊர் மருங்கிற் போகிநெல்லோடு முல்லையுந் தூஉய்த் தொழுதுநிற்ப, ஆய்மகள் கன்றின் அலமரல் நோக்கி ‘நுந்தாயர் கோவலர் உய்த்தர இன்னே வருகுவர்’ என்போள் நன்மொழி கேட்டனம் அதனாலும், நின் தலைவர் திறையராய் வினைமுடித்து வருவது வாய்வது, மாயோய்! நீ நின் எவ்வங் களை எனக் காட்டவுங் கலுழ்ந்து கண்முத்து உறைப்ப ஆற்றாது வருந்துந் தலைமகள், பாசறையில் இன்றுயில் வதியுந் தலைவனைத் தன் மருங்கிற் காணாளாய் மேலும் வருந்திப், பின் தன் நெஞ்சை அவனிடத்தே ஆற்றுப் படுத்தித், தான் தனியளாய் இருக்கும் நிலைமையினை நீளநினைந்து பார்த்து, “நாம் நங்காதலன் சொல்வழி ஆற்றியிருத்தலே முறை” எனத் தேற்றியும், ஓடுவளை திருத்தியும், மையல்கொண்டும், உயிர்த்தும் நடுங்கி, நெகிழ்ந்து, விளக்கிற்சுடர் அழல, மாடத்து முடங்கிறைச் சொரிதரும் அருவி ஓர்ப்பனள் கிடந்தோள் செவிநிறைய ஆலின, பரிதுரக்குஞ் செலவினர் நெடுந்தேர் பூண்டமா என்று வி முடிவு செய்க.

வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/113&oldid=1578967" இலிருந்து மீள்விக்கப்பட்டது