உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பின்னிணைப்பு

முல்லைப்பாட்டு ஓர் அறிமுகம்

இரா. இளங்குமரனார்

முல்லைப்பாட்டு – குறிப்பு வரைக.

பத்துப்பாட்டுள் ஐந்தாவதாக அமைந்தது முல்லைப் பாட்டு.பாட்டு என்று தொகை செய்ய அமைந்தவற்றுள் இதுவும் ஒன்று. பத்துப்பாட்டு அடிகளில் குறைந்த பாட்டும் முல்லைப் பாட்டே. அதன் அடிகள் 103.

முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? அவரைப் பற்றி அறிவ தென்ன?

முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனார் என்பார். பழநாளில் பூதன், பேயன், சாத்தன் ஆகிய பெயர்கள் பெரு வழக்காம். மற்றைப்பூதன் என்பாரில் இருந்து பிரித்து அறியும் வகையில் ‘ந’ பூதனார் எனப்பட்டார். நக்கண்ணை, நற்றத்தன், நக்கீரன் என்னும் பெயர்களைப் போல்,

இவர் பெயர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் எனப்படுதலால், இவர் ஊர் காவிரிப் பூம்பட்டினம் என்றும், இவர் தந்தையார் பொன் வணிகம் செய்ததால் பொன் வணிகனார் மகனார் என்றும் இவர் பெயர் நப்பூதனார் என்றும் அறியப்படுகிறார்.

முல்லைப்பாட்டு என்பதன் பெயர்க்காரணம் கூறுக.

முல்லை என்பது நறுமணமிக்க மலர் ஒன்றையும், அம்மலர் சிறந்து விளங்கும் முல்லை நிலத்தையும் (காடும், காடு சார்ந்த மும்), அம்முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கத்தையும் ஒரு சேரச் சுட்டுவதாய் அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/123&oldid=1578978" இலிருந்து மீள்விக்கப்பட்டது