உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

முல்லை ஒழுக்கம் என்பது யாது?

91

அன்பின் ஐந்திணை ஒழுக்கங்களில் ஒன்று ‘முல்லை' ஒழுக்கம். திணை =திண்மையானது; கட்டமை ஒழுக்கமுடையது.பணி அல்லது வேலைக்காகப் பகலில் பிரிந்து சென்ற தலைவன் வீடு திரும்பி வரும் பொழுதாகிய மாலைப் பொழுதில், அவன் வரவை எண்ணிக் கொண்டு மனைவி எதிர்பார்த்துக் காத்திருத்தல் முல்லைத் திணையாகும்.

மாலைப்பொழுது இருத்தலுக்குச் சிறந்ததாவது எப்படி?

மாலைப்பொழுதேபணிமுடித்துமீளும்பொழுது,ஆதலாலும், கூடுவிட்டுச் சென்றபறவையும், வீடு விட்டுச் சென்ற ஆணும் திரும்பும் பொழுது மாலை ஆதலாலும், அப்பொழுது சிறந்தது ஆயிற்றாம்.

மாலையுள் சிறப்புடைய மாலை எது? சிறப்புடையது அது என்பது ஏன்?

மாலையுள் சிறப்புடையது கார் காலத்து மாலைப் பொழுதாகும். கதிர் மறைதலும், இருள் படிதலும், வெளியே சென்ற உயிரிகள் மீளலும் அப்பொழுது ஆகலான், சிறந்ததா யிற்றாம்.

அம் மாலையும் கார் காலத்து மாலையாகும். கார் காலத்தில் மாலை, முன்னமே இருண்டுவிடும்; மழையும் பெய்யும்; இருளாலும் மழையாலும் வழி மறையும்; குளிரும் மிகும். ஆதலால், கணவன் வரவை எதிர்நோக்கல், வீட்டில் தனித்திருக்கும் மனைவிக்கு இயற்கையாகும்.

'காரும் மாலையும் முல்லை' என்பது தொல்காப்பியம்.

காரும் மாலையும் முல்லை என்பதை விளக்குக.

கார் = கார் காலம்; மழை காலம்; ஆவணி புரட்டாசி என்னும் மாதங்கள் அவை. மாலை என்பது நண்பகல் கழிந்து பொழுது சாய்ந்து முகில் திரண்டு கதிரை மறைத்து இருளச் செய்யும் பொழுதாகும். இவை முல்லை ஒழுக்கத்திற்குரிய பெரும் பொழுதும், சிறு பொழுதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/124&oldid=1578980" இலிருந்து மீள்விக்கப்பட்டது