உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் – 9

முல்லை' என்னும் பெயர் பற்றி விளக்குக.

முல்லை என்பது மாலையில் மலரும் பூ; கற்பு என்ப தற்குச் சான்றாக அமைந்த பூ; அப்பூக்கள் அமைந்த கொடி இருக்கும் இடத்திற்கு ஆகி, அவ்விடத்து ஒழுக்கத்திற்கு ஆகியது. ப்படியே ஆக வொழுக்கத் திணைகள் ஐந்தற்கும் நிலம் காலம் வகுத்தமைத்த நம்முன்னோர் வாழ்வியல் நோக்கும் அமைப்பு முறையும் சிறப்புடையதாம்.

அகப்பொருள் ஒழுக்கம் என்பது என்ன?

மாந்தரின் இயல்பான உணர்வு வெளிப்பாடாகக் கிளரும் காதல் வாழ்வும் (களவும்), அதன் தேர்வு மாறாமல் மணங்கொண்டு வாழும் குடும்ப வாழ்வாம் கற்பு வாழ்வும் பற்றியது அப்பொருளாம். கணவன் மனைவியர் தம் அகத்தே கிளர்ந்து, அகத்தே அமைந்து, அகத்தே (மனையகத்தே) வாழும் வாழ்வு, அகவாழ்வு எனப்பட்டதாம்.

அகவாழ்வுக்கு அமைந்த தனிச்சிறப்பு என்ன?

அக வாழ்வின் தனிச் சிறப்பு அகவாழ்வுடையவர் தலைவன் தலைவி கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி எனப்படுவரே அல்லாமல் இன்ன பெயருடையவர் என்று குறித்துக் கூறப் படுதல் ஆகாது என்பது தனிச்சிறப்பு ஆகும்.

முல்லைப்பாட்டின் தொடக்கச் சிறப்பு என்ன?

முல்லைப் பாட்டின் தொடக்கமே அப் பொருளின் முதற் பொருளாம். காலமும் (கார் காலமும், மாலைப் பொழுதும்) முல்லை இடமும் குறிக்கப்படுதல் எடுத்துக்கொண் பொருளைத் தொட்டவுடன் துலங்க வைக்கும் சிறப்பாகும். முல்லை நிலக் கருப்பொருளாகக் கூறப்படும் மாயோனைப் பற்றியும் அத் தொடக்கத்திலேயே சொல்வது மேலும் சிறப்பாம். மாலைப் பொழுதை நப்பூதனார் எப்படிக் கூறுகிறார்?

உலகை யெல்லாம் வளைத்துக் கொண்டு சங்கு சக்கரத் தொடு தோன்றும் மாயோனைப் போல், நீரை ஒழுக விட்ட கருமுகில் மேலே எழுந்தது என்பது அத் தொடக்கம் ஆம்.

பிற் காலத்தில் இவ் வறிவியல் நுட்பத்தை மாற்றிப் புனைவு ஆக்கிவிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/125&oldid=1578981" இலிருந்து மீள்விக்கப்பட்டது