உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

பினைப் புனைவு என்ன?

93

மாவலி என்பான் ஒரு வேந்தன்; சேர நாட்டை ஆட்சி புரிந்தவன்; அவனிடம் திருமால் ஆகிய நெடுமால் குறுவடி வொடும், ‘வாமனன்' என்னும் பெயரொடும், வந்தான். வந்தவன் வேதிய வடிவனாக இருந்தான். அவன் யான் வேள்வி செய்வதற்கு என் காலடியால் மூன்றடி அளவு உள்ள இடம் தானமாகத் தர வேண்டும் என்றான். 'இல்லை' என்று சொல்லி யறியாத வள்ளல் மாவலி, 'தந்தேன்' என்றான். அவன் அமைச்சனும் நுண்ணிய அறிவினனுமாகிய சுக்கிரன் என்பான். இவன் நெடுமால்; உன்னை ஏமாற்றி நிலத்தையெல்லாம் பறிக்க வந்துள்ளான்; ‘தாராதே’ என்று தடுத்தான். மாவலி, “தடுத்து பாவம் புரியாதே! கொடுத்தது கொடுத்ததுதான்” என்று சொன்னான் மாவலி. “கொடுத்த சான்றாய் நீர் வார்த்துத்தா” என்றான் குறளன், ஆகிய வாமனன். நீர்க்கலம் எடுத்துக் கொடுக்காதே என்றும் தடுத்தான் சுக்கிரன். ஆயினும் மாவலி நீர் வார்த்தான். வானளாவ வார்த்தான்; ஒரு காலடியால் மண்ணையும், ஒரு காலடியால் விண்ணையும் அளந்தான். மூன்றாம் அடிக்கு இடமில்லாமை யால் கொடுத்த வள்ளலின் தலைமேல் தன் காலடியை வைத்து மிதித்து மண்ணுள் அழுத்தினான் என்பது புனைவுக் கதையாயிற்று.

இதன் அறிவியல் நுண்மை என்ன?

உலகெல்லாம் வளைத்து, கடல் நீர் பருகிய முகில் கருமுகில் - மேலே படர்ந்து நீரை மழையாகப் பொழிந்து அதன்பின் மேலே சென்றது என்பது அறிவியல் நுண்மை யாம்.

66

மாஅல் போல என்பது கருமுகில் (காளமேகம்) போல என்பதாம். உயர்ந்து செல்லும் மழை முகில் இயலை மாஅல்' என்னும் அள அளபெடையாலும், மால் என்னும் பெயராலும் (மா, மால், மாயோன், மாயோள்) சுட்டினார். "செய்தி கொன்றாற்கு உய்தி இல் ல்”லென்பது தமிழக அறம் என்பதைப் புறநானூற்றுப் பாட்டு காட்டுகின்றது. 'கொடுத்தவன் தலையில் மிதித்துக் கெடுத்தான்' என்பது பெரும் பாவச் செயலும் பழிச் செயலும் அல்லவோ! இறைமைக்கு தகுவதா அது? இதனால் என்ன ஆனது? தமிழர் அறிவியல், கண் மூடித்தனமாக மாற்றப்பட்ட காட்சியேயாம். ஆயினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/126&oldid=1578982" இலிருந்து மீள்விக்கப்பட்டது