உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

94

  • மறைமலையம் - 9

எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும்” என்னும் பழமொழி உண்மையை வெளிப்படுத்தி விடுகின்றது.

முல்லைப்பாட்டின் மூலச்சுருக்கம் என்ன?

ல்லிருததலை

முல்லையின் உரிப்பொருளாகிய விளக்குதலும், அதன் சூழல்களைச் சுவைபடக் கூறுதலும் முல்லைப் பாட்டின் மூலச் சுருக்கமாம் அது. பகைமேற் சென்ற தலைவன் வருமளவும் தலைவி பொறுத்திருக்கு மிடத்து அவன் வரவினைக் கண்ட தோழி முதலியோர் தம்முள் மகிழ்ந்து தலைவிக்குக் கூறியதாக அமைவது இப்பாடற் சுருக்கமாம். அவன் மீள் பொழுது கார்கால மாலைப் பொழுதாம்.

விரிச்சி என்பது என்ன?

இயற்கையில் நிகழும் நிகழ்சசி, பறவை முதலியவற்றின் குரல், உருவிலியாகக் கேட்கும் (அசரீரி) சொல் முதலிய வற்றைக் கொண்டு நிகழ இருப்பதை, அக் குறிப்பை அறிந்து கூற வல்லவர் கூறுவது விரிச்சியாம்.

தலைவியின் பிரிவுத்துயர் அகலும் என்பதை விரிச்சி கூறுவார் எவ்வாறு கூறுகின்றனர்?

பெருமுது பெண்டிர் நெல், முல்லை, அலரி முதலிய வற்றைத் தூவி இறையை வணங்கி நிற்கின்றனர்.

அப்பொழுது சிறிய கயிற்றால் கட்டப்பட்டுள்ள ஆன் கன்று பகலில் புல்மேயச் சென்ற ஆவை எதிர்பார்த்து வருந்தி நிற்கிறது. கன்றை, ஆயர் இளமகளிர் “ஆயர் ஆன்களை ஓட்டிக் கொண்டு இப்பொழுதே வந்துவிடுவர். உன் கவலையை விடு விடு" என்று கூறிக் கன்றின் முதுகை வருடுதலை அறிந்த பெருமுது மகள் தலைவன் உறுதியாக வரும்பொழுது இது என்பதை இச்சொல் காட்டுகிறது; ஆதலால், தலைவன் தான் மேற்கொண்ட போர் வினையை முடித்து வெற்றியோடு வருவான்; ஆதலால் உன் கவலையை விடு என்றனர். இது முல்லைப்பாட்டு கூறும் விரிச்சிச் செய்தியாம்.

விரிச்சி கூறுவார் கூற்றை நம்பித் தலைவி கவலைவிடாமை ஏன்? விரிச்சி கூறுவார் கூறும் ஆறுதல் மொழி இது என்றும், வருவான் எனக் கூறுதல் அவன் வந்தமை ஆகாது; வந்ததைத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/127&oldid=1578983" இலிருந்து மீள்விக்கப்பட்டது