உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

95

கண்ணால் கண்டால் தான் உண்மையாம் என்றும் கொள்வது உளவியல் நுட்பமாம்.

அதனால், “வருதல் தலைவர் வாய்வது; நீநின்

பருவரல் எவ்வம் களைமா யோய் எனக்

காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து

பூப்போல் உண்கண் புலம்புமுத் துறைப்ப”

என்றார். (20-23)

தலைவி நிலையைக் கூறிய நப்பூதனார் தலைவன் நிலையைக் கூற எவ்வாறு தொடங்குகிறார்.

ஒரு காட்டாற்றின் பக்கமாக அகன்ற பகுதி உண்டு. பிடவு முதலிய புதர்ச் செடிகள் இருந்தன. அவற்றை அழித்து அங்கிருந்த வேட்டுவக் குடிகளை அகற்றி முள்வேலி அமைத்தான். கடல்போல் விரிந்த படைவீடுகள் உண்டாக்கினான்.தெருக்களை அமைத்தான். தான் தங்குதற்கென உள்ளறையும் ஏற்படுத்தினான். பாசறையில் இருந்த யானையின் நிலையை வரைக.

யானை மதநீர் வழிய நின்றது. சிறந்த கரும்பு, நெற்கதிர், யானை விரும்பித் தின்னும் அதிமதுரத் தழை முதலியவற்றை வைத்தாலும் அவற்றை உண்ணாமல் கையால் எடுத்து, தலையையும் நெற்றியையும் அவற்றால் தடவிக்கொண்டிருந்தது. சுவைமுள்ளால் குத்தி அதன் பாகன் கூறும் வடமொழிக் கட்டளைச் சொற்களைக் கூறவும் அது வைக்கப்பட்ட கவளத்தையும் தின்னாமல் மதர்த்து நின்றது.

பாசறை அமைவைப் பற்றிப் பூதனார் மேலும் என்ன கூறுகிறார்?

குந்தத்தை ஊன்றிக் கேடயம் தூக்கினர். வில்லையும் தூணியையும் வைத்திருந்தனர்; அவை பாதுகாப்புப் போல் அமைந்திருந்தன. இவற்றின் இடையே குறிய வளையல் அணிந்த கையினரும், பிடர் மறைக்கும் கூந்தலரும் ஆகிய மகளிர் ஒளி மிக்க வாளைக் கச்சுடன் கொண்டிருந்தனர். எண்ணெய்ப் பந்தம் ஏற்றி அதில் எண்ணெய் குறையாவாறும் திரியணையாவாறும் பாதுகாத்து இருந்தனர். மெய் காப்பாளர்கள் காவலாகச் சூழ்ந்திருந்தனர். பொழுது இவ்வளவு என்று அளவிட்டுச் ச் சொல்லும் நாழிகைக் கணக்கர் அவ்வப்போது பொழுதைக் கூறிக் கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/128&oldid=1578984" இலிருந்து மீள்விக்கப்பட்டது