உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் - 9

அரசன் இருந்த நிலையை எவ்வாறு கூறுகிறார்?

சட்டை இட்டவரும் கண்டார் அஞ்சும் தோற்றத்தரும் வலிமையமைந்த உடலினரும் ஆகிய ‘யவனர்’ புலிச் சங்கிலி யால் புக அரிதாகச் செய்யப்பட்ட அழகுமிக்க உள்ளறைக் கண், ஒளிவிளக்கேற்றித் திரையிட்டுத் தடுக்கப்பட்ட இரண்டறை களையுடைய படுக்கைப் பகுதியில் தலைவன் படுத்திருந்தான்; வாயினால் சொல்லாமல் மெய்காட்டும் குறிகளால் கருத்தை வெளிப்படுத்தும் யவனர் பக்கம் நின்றனர். முதல்நாள் நடந்த போரையும் அதனால் ஏற்பட்ட விளைவையும், கண்ணுறக்கம் கொள்ளாமல் எண்ணி ஒரு கையை அணை மேலும் ஒரு ண கையைத் தலை மேலும் வைத்துக்கொண்டு கிடந்தான்.

வேந்தன் கண்ணுறங்காமல் சிந்தித்தவையாகப் பூதனார் என்ன கூறுகிறார்?

வேல் பாய்தலால் புண் கொண்டு பிடியை மறந்த யானையையும், அதன் கை துணிபட்டுப் பாம்பு புரள்வது போலப் புரண்ட துயரையும், அஞ்சாது நின்று பகைவர் அலறத் தாக்கி இறந்துபட்டோர் அவலத்தையும், கூரிய அம்பு தைத்தலால் புண்ணுற்ற குதிரைகளின் துன்பத்தையும் எண்ணி அச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் தலைவன் என்கிறார்.

பாசறையில் உள்ள தலைவனின் நிலையை எண்ணிய தலைவியின் நிலையாகப் பாவலர் கூறுவதென்ன?

தலைவன் பாசறையில் இவ்வாறு கண் துயிலின்றித் துயருற் றிருக்கத் தலைவி, தலைவன் திரும்பி வாராத் துயரால் மனம் கலங்கியவனாய் நெடிது நினைத்தாள்; நெட்டுயிர்ப்புக்கொண்டாள்; கழன்று போன வளையலை ஒழுங்கு செய்தாள்; அம்பு தைக்கப்பட்ட மயிலைப் போல் நடுங்கினாள்; அணிகலங்கள் எல்லாம் கழன்றோட ஓங்கிய மாடத்தில் மழைநீர் அருவியாகப் பொழியும் ஒலியைக் கேட்டுக் கொண்டு கண்ணயர்வின்றிக் கிடந்தாள்.

தலைவி இவ்வாறு வருந்திக் கிடக்கும் நிலையில் நேர்ந்த தென்ன?

பிறர் பகையை ஒழித்து நாட்டை கவர்ந்து பெரும் படையொடு வெற்றிக் கொடி விளங்க, ஊது கொம்பும் வளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/129&oldid=1578985" இலிருந்து மீள்விக்கப்பட்டது