உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

97

கொம்பாம் வாங்காலும் ஒலிக்கலாயின. காயா அஞ்சனமென மலரவும்,கொன்றைபொன்னெனப் பூக்கவும், காந்தள் பூகையைப் போல் மலரவும், தோன்றிப் பூ குருதிபோல் விளங்கவும் காடு மலர்ந்து விளங்கியது.

மழை பொழிதலால் வரகின் விளை விடத்தே ஆண் மானும் பெண் மானும் திரியவும், மழை பொழிதலால் காடு தண்ணென்று வளம் கொழிக்கவும் அவற்றைக் கடந்து விரைந்து செலுத்துவார் கருத்துக்கு ஏற்பத் தாவி வரும் தேர் பூண்ட குதிரை வீட்டின் முற்றத்தே வந்து சேர்ந்தது.'

“பிரிந்தவர் கூடினால் பேசவும் உண்டோ”

என்பார் போல் பூதனார் நூலின் இறுதியை,

66

வள்ளியங் காடு பிறக் கொழிய

துனைபரி துரக்கும் செலவினர்

வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே'

என நிறைவு செய்தார். துனை = விரைவு.

இப்பாட்டால் அறியப்படும் பழவழக்குகள் எவை?

விரிச்சி என்பது பார்த்து நிகழ்வைத் தீர்மானிக்கும் வழக்கம் உண்டுஎன்பதும்,அதனைப் பெருமுதுபெண்டிர்மேற்கொண்டனர்

என்பதும் பழவழக்கமாகத் தெரிகின்றது.

போர்க்காலங்களில் பகலில் போரிடலும் இரவில் போரை நிறுத்தி அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாடி வீடுகளில் தங்குதலும் வழக்கம் என்பதை அறியலாம். பாடி என்பது ‘கண்படை’ கொள்ளும் இடம் என்பதாம். யானை பழக்குவார் வட மொழியராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் உணர்வுச் சொல் தம் தாய்மொழி வழியே வெளிப்படல் இயற்கை. அரசனுக்கு மெய்காப்பாளராக இருப்பார் வேற்று மொழியராகவும், மூங்கையராகவும் கொண்டிருத்தல் அரசன் அமைச்சர் முதலோர் எண்ணம் சொல் வெளிப்படாதிருக்கத் தேர்ந்த வழியாகவும், தம் தொழிலே குறிப்பாக இருப்பார் என்னும் தெளிவாலாயதாகவும் கொள்ளலாம்.

காட்டையழித்தல் காட்டு விலங்கை அழித்தல் காடு வாழ் மக்களை அழித்தல் அல்லது ஓட்டல், நிலப்பறி செய்தல் என்பவை உலகு தழுவிய வன் செயலாக நிகழ்ந்து கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/130&oldid=1578986" இலிருந்து மீள்விக்கப்பட்டது