உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

99

தலைவன் வருகையை அறிவிப்பது போல் ‘இன்பல் இமிழிசை அருவியை, வீட்டுளே காட்டல் மேதகு நயமாம் (88)

தலைவன் தலைவியை நினைந்து விரைந்து வருவதற்கு,

66

வானம் வாய்த்த வாங்குகதிர் வரகில்

திரிமருப் பிரலையொடு மடமான் உகளலைக்

காட்டுதல் உள்ளகத்தூண்டல் உரிப் பொருள் விளக்கமாம்.

முல்லைக் கருப் பொருளாக நப்பூதனார் காட்டுவன எவை?

முதற் பொருள் வழியே கருக் கொண்டது கருப் பொருளாம். அவை தெய்வம், உணவு, விலங்கு, மரம், இசை, தொழில் முதலிய பலவுமாம்.

'மாஅல் போல' என முல்லை நிலத் தெய்வத்தைச் சுட்டுகிறார்.

முல்லை வாணராம் ஆயரையும் ஆன் வளர்ப்பையும் கூறுகிறார்.

பிடவம், முல்லை, அலரி, காயா, கொன்றை, கோடல், தோன்றி முதலியவற்றை விளக்குகிறார். மயில், மான், இரலை முதலியவற்றைச் சொல்கிறார்.

-

வையும் பிறவும் முல்லைக் கருப் பொருள்களாம்.

நப்பூதர் தொடருவமை காட்ட வல்லார் என்பதைச் சுட்டுக.

“செறியிலைக் காயா அஞ்சன மலர

முறியிணர்க் கொன்றைநன்பொன் கால

கோடற் குவிமுகை அங்கை அவிழ

தோடார் தோன்றி குருதி பூப்ப”

என்னும் பகுதியால் அவர்தம் தொடருவமை வைப்பு விளக்கமாம்.

(93-96)

‘பூதம்” என்பது அச்சப் பொருள் தருகிறதாகக் கொள்கிறோமே! இப்பெயர் அப்பொருள் தருவதா?

அப்பொருள் தந்தால், பூதத்தார் என ஆழ்வார் ஒருவர்

பெயர் கொண்டிருக்க மாட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/132&oldid=1578988" இலிருந்து மீள்விக்கப்பட்டது