உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் – 9

தமிழ் மாமலை

“மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்; மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல், முறையாய் இவைகட்குச் சான்று காட்டி, முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை

வாழ்த்தாத நாளில்லை - வையகம் மறைமலையடிகள் மறவாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை”1

இந்த இசைப்பாடலின் சொல்லோட்டம் ‘பாவேந்தர் பாரதிதாசனார் பாட்டு' என்று காட்டுகின்றது.பாவேந்தர் தாம் வாழ்ந்த நாளை எண்ணியும் நாம் வாழும் எதிர்கால நாள்களையும் எண்ணியுமே “வாழ்த்தாத நாள் இல்லை” என்று பாடினார். ஆனால், மறைமலையடிகளை வாழ்த்தும் நாள்கள் சிலவாயின. இன்றைய நாளை ‘மறைமலையடிகள் மறவாத் திருப்பெயர்' வாழ்த்தும் நாளாகச் செய்த பெருமக்களைப் ‘பொலிக; வாழ்க’ என்று பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.

-

66

மலையின் முகடுகள் மூன்று

“முடியுமா பேச, வேற்று

மொழிக்கலப் பின்றி? வாழ்வு விடியுமா தமிழால்? - என்று வினவிய ஆணவந் தான்

ஒடியுமா றுதைத்து, நாவில் ஒரு தனித் தமிழே, கற்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/141&oldid=1578998" இலிருந்து மீள்விக்கப்பட்டது