உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

அடையுமா றுழைத்த எங்கள்

அடிகளார் புகழே வாழ்க!”

109

இவ்வரிகள் கவித் திருமதி சௌந்தரா கைலாசம் அவர்கள் அமைதியை ஆற்றொழுக்கில் வைத்துப் பாடியுள்ளது. அவரே, ‘ஆணவந்தான் ஒடியுமாறு உதைத்து” என்று வெடித்திடும் குரலில் பாடினார். குரலை வெடிக்க வைத்தது அடிகளாரின் தனித்தமிழ் உணர்வு மூட்டிய நெருப்புப் பொறி எனலாம். இவ்வெடிப்பில் முழங்குவது அடிகளாரின் தமிழ் முத்திரை; ஆம்; தமிழ் முத்திரை! மேலும் பேராசிரியர்க்கெல்லாம் பேராசிரியராய்த் திகழ்ந்த முன்னவர் மு. வரதராசனார் குரல், வாழ்த்துடன் இனிக்கிறது: சாதிப் பேயைச் சாடிய வீரன்;

சைவ சமயம் சாதியைக் கடந்ததென் றையந் தீர அறிவுறுத் திட்டோன் மறைமலை யடிகள் மாண்புகழ்

துறைதொறும் தமிழ்போல் துலங்குக பெரிதே!

என்று எழுந்த அகவல், சாதிப்பேய் குமுகாயத்தில் புகுந்ததைப் போல் சைவத்திலும் புகுந்ததை அடிகளார் சாடிய சாடலை ஒலிக்கிறது. இது அடிகளாரின் சைவப் பகுத்தறிவு முழக்கம்.

பாவேந்தர் பாட்டின் தமிழின ஊற்றம் கவித்திருமதியின் தமிழ் முத்திரை

முனைவரின் சைவப் பகுத்தறிவு முழக்கம்

ஆகிய மூன்றும் இணைந்து பிணைந்த திருவுருவமே நிறை தமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் எனலாம்.

அடிகளார் தமிழோடு வடமொழி, ஆங்கிலம் புலமை வாய்ந்தவர். மொழிபெயர்ப்பு நூல்களையும் உருவாக்கியவர். தமிழ்த் துறையில் விளங்கிச் சில காலத்திற்குப் பிறகே அவருக்குத் தனித்தமிழ் உணர்வு ஊறிற்று, 'வேதாசலம்' என்ற பிள்ளைப் பெயரோடு தமிழ்ப் பணியைத் தொடங்கிய அவர் ‘மறைமலை’ என்று தமிழாக்கிக் கொண்டார். சுவாமி வேதாசலம் எனப்பட்டதால் மறைமலையடிகளானார். அவரது கருத்துகள் சில புரட்சியை ஒலிப்பவை. வடமொழி நான்மறை. உபநிடதம்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/142&oldid=1579000" இலிருந்து மீள்விக்கப்பட்டது