உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் - 9 - 9

இவற்றையெல்லாம் பயின்ற அவர் இவற்றின் படைப்புகளில் தமிழர்க்குப் பங்குண்டு என்று புதுமையாக எழுதினார்.

இருக்கு மறைக்கும் உபநிடதங்கட்குமுள்ள முரண் பாட்டைக் கண்டு க் கண்டு தன் இனத்தாரின் தகவுகளை இனமான உணர்வுடன் விளக்கி எழுதினார்.

“கல்லாலின் கீழிருந்து நால்வர்க்கு அறமுரைத்தவைதாம் நான்கு மறைகள்; அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்கள்தாம் அந் நான்கறம்.

பாணினிக்கு முன்னர் தொல்காப்பியர்

வடமொழி இலக்கணமாம் பாணினியின் ‘அட்டாத் தியாயி' என்னும் நூலின் காலத்தையும் தொல்காப்பியர் காலத்தையும் ஆராய்ந்து வரையறுத்த அடிகளார், “பாணினிமுனிவர்க்கு நானூறு ஆண்டுகளின் முன்னே ஆசிரியர் தொல்காப்பியனார் இருந்தனர்”4 என்று காட்டினார்.

மறைமலையடிகளார் தம் கைத் திறத்தால், அறிவுத் திறனால், தமிழ் ஊற்றத்தால், சைவ உயர்வால் 64 நூல்களை உருவாக்கியுள்ளார். இவ்வறுபத்து நான்கு நூல்களையும் நூலுருவாக்க நிலையில் வைத்துப் பார்த்தால்,

1. சொற்பொழிவு நூலுரு

2. கட்டுரை - தொகுப்பு நூலுரு

3. நூலாக்க நூலுரு

4. மொழிபெயர்ப்பு நூலுரு

L

என்று நான்காகக் கொள்ளலாம். இவ்வொவ்வொன்றிலும் உள்ள நூல்களைக் கருத்தளவில் இயல்களாக வகை செய்தால் பின்வரும் 16 இயல்களாகும்.

இயல்

1. கோட்பாட்டியல்

2. உரையியல்

3.பாடலியல்

4.அளவையியல்

நூல்கள்

4

6

2

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/143&oldid=1579009" இலிருந்து மீள்விக்கப்பட்டது