உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

காண்

மறைமலையம் - 9

டன்றி அவ்வறிவு வேறு தனித்து நடைபெறக் காணாமையானும், அங்ஙனம் நடைபெறுமிடத்தும் அவ் வறிவாற் பற்றப்படுவன மண் புனல் அனல் கால் விசும்பு என்றற் றொடக்கத்து ஐம்பூதங்களும் அவ்வைம் பூதங்களின் சேர்க்கையாற் பிறந்த பொருட்டன்மைகளுமே யன்றிப் பிறிதின்மையானும், முழுமுதற் பெரும்பொருளான கடவுள் இவ்வாறு அறியப்பட்ட பொருள்களுள் ஒன்றன்றாய் இவற்றிற் கெல்லாம் அப்பாற்பட்டதாய் விளங்குவ தொன்றாகலானும் அவ்வறிவுக்கு அம்முதற் பொருள் ஒரு சிறிதாயினும் புலப்படற் பாலதன்றாய் நிற்றல் பெரிதும் பொருத்தமாவதேயாம். இது பற்றியே அறிவுநூல்களெல்லாம் இறைவனை இவ்வுலகத்துப் பொருள்களுள் ஒன்றாய் வைத்து உடம்பாட்டால் ஓத ஏலாமை தெளியக் கண்டு, இவற்றுள் இதுவுமன்றாய் அதுவுமன்றாய் மற்றெதுவுமன்றாய் அப்பாற்பட்டதென்று எதிர்மறை முகத்தான் வைத்து விளக்குதற்கு மாத்திரம் ஒருப்பட்டு,

66

"விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந்

திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்,”

என்றும்,

“பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்

அந்தமு மாதி யில்லான் அளப்பில னாத லாலே எந்தைதா னின்ன னென்று மின்னதா மின்ன தாகி, வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே'

என்றும்,

66

‘அல்லையீ தல்லையீதென மறைகளு மன்மைச் சொல்லினாற் றுதித்திளைக்கு மிச்சுந்தரன்.

என்றும்,

“பூதங்க எல்ல பொறியல்ல வேறு

புலனல்ல வுள்ளமதியின்

பேதங்க எல்ல இவையன்றி நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/163&oldid=1579178" இலிருந்து மீள்விக்கப்பட்டது